Supreme Court on CJP Protest: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்தின் கருத்தால் தான், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எனும் அமைப்பு உருவானது குறிப்பிடத்தக்கது.

நேரமில்லை என சொன்ன உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் நீட்சியாக நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி மேற்கொண்டனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், கண்மூடித்தனமான தடியடி நடத்தினர். பெண்கள் மற்றும் மாணவர்கள் என்றும் பார்க்காமல் கண்மூடித்தனமாக தாக்கியதோடு, எலெக்ட்ரிக் ஷாக்கும் கொடுத்துள்ளனர். காவல்துறையினரே வாகனங்களை சேதப்படுத்துவது மற்றும் கல்வீச்சில் ஈடுபடுவதும் போன்ற வீடியோக்களும் வைரலாகியுள்ளன. இந்நிலையில் தான் மாணவர்கள் மீதான தடியடி சம்பவத்தை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதற்கெல்லாம் தங்களுக்கு நேரமில்லை என கூறி தலைமை நீதிபதி சூர்யகாந்த் மனுவை நிராகரித்துள்ளார்.

”வீடியோக்களை பார்க்க விருப்பமில்லை” - தலைமை நீதிபதி

இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நடைபெற்ற வாதங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர்: மாணவர்களின் போராட்டம் ஜந்தர்மந்தரில் தொடர்ந்து வருகிறது. காவல்துறையினர் ஏற்கனவே மூர்கத்தனமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். கண்ணீர் புகை குண்டுகள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன

தலைமை நீதிபதி: தயவு செய்து உங்கள் நேரத்தையும், எங்களது நேரத்தையும் வீணடிக்காதீர்கள். உங்க்ளுடைய நேரம், எங்களுடைய நேரத்தை காட்டிலும் மதிப்புமிக்கது

மனுதாரர்: மாணவர்கள் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். முதலாவதாக நீட் தேர்வு வேண்டாம், நேர்மையாக தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். இரண்டாவதாக..

தலைமை நீதிபதி: மிக்க நன்றி (மனுதாரர் வாதாடிக்கொண்டிருந்தபோதே இப்படி கூறினார்)

மனுதாரர்: தடியடி நிகழ்வு தொடர்பாக பல வீடியோக்களை சேகரித்துள்ளோம். அனுமதி தந்தால் அவற்றை இங்கே..

தலைமை நீதிபதி: எங்களுக்கு அவற்றை பார்ப்பதில் விருப்பமில்லை. அதற்கான நேரமும் இல்லை

என கூறி மனுதாரரின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றத்தை சிலர் நாடினர். அப்போது இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை இழுக்க வேண்டாம் என கூறி மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளார்.

தலைமை நீதிபதியால் உருவான CJP:

தகவலறியும் உரிமைச் சட்டம் போன்றவற்றை சிலர் தவறாகப் பயன்படுத்தி, தேவையின்றித் தொல்லை தருவதாகவும், அவர்களை கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே இளைஞர்கள் பலரும் இணைந்து 'கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி' (Cockroach Janta Party) என்ற இணையதள இயக்கத்தை முன்னெடுத்தனர். அந்த அமைப்பினர் சார்பில் நடைபெற்ற பேரணியில் தான், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினார். இதுகுறித்து அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தபோது, அதற்கெல்லாம் தங்களுக்கு நேரமில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

Source: Read Full Article