அவசரப்பட்டு மாற்றம் மாற்றம் என சொல்லி ஓட்டு போட்டு விட்டோம். எத்தனை நாட்களுக்கு அந்த கொடி பறக்கிறது என பார்க்கலாம் என தவெகவை நடிகர் சத்யராஜ் சரமாரியாக சாடியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் செயல்படும் கலைஞர் கணினி கல்வியகத்தில் பட்டமளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகரும், திமுக ஆதரவளாருமான சத்யராஜ் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், திமுகவின் முதல் கொள்கை என்பது இட ஒதுக்கீடு, படிப்பு, கீழே இருப்பவர்களை மேலே கொண்டு வருவது தான். அது ஆட்சியிலும் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நடக்கும். ஒருவேளை திமுக ஆட்சியில் இருந்தால் ஆளும் கட்சி, இல்லாவிட்டால் ஆளும் கட்சியை ஆளும் கட்சி என அழைக்கப்படும். யார் ஆளும் கட்சியாக இருந்தாலும் திமுக போட்டுக் கொடுத்த பாதையில் தான் ஆட்சி நடத்த வேண்டும்.

நாம வாங்கி கொடுத்த ஆட்டோவில் வேறு ஏதோ கொடி பறக்குதே என சொன்னார்கள். எவ்வளவு நாள் பறக்கிறச்து என பார்க்கலாம். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது குதிரைப் பந்தயம் நடைபெற்ற மைதானம் இருந்தால் தானே ரேஸ் நடக்கும் என சொல்லி அங்கு செம்மொழி பூங்கா அமைக்க பணிகள் தொடங்கி வச்சாரு. இப்ப அந்த பூங்காவே இல்லாத நிலை வருமென முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியம் சொன்னாரு. ஆனால் அந்த செம்மொழி பூங்காவை மீண்டும் மு.க.ஸ்டாலினே முதல்வராக வந்து திறந்து வைக்கும் சூழல் வரலாம். அத்தகைய நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய அளவில் இருக்கிறது.

அவசரப்பட்டு மாற்றம் மாற்றம் என சொல்லி ஓட்டு போட்டு விட்டோம். குழந்தைகள், நண்பா, நண்பீஸ் எல்லாம் பெரியவர்களை போட்டு மடக்கி ஓட்டு வாங்கி விட்டார்கள். என் மாமா 75 வயதானவர் எப்போதும் எம்ஜிஆர் மேல் கொண்ட பற்றால் அதிமுகவுக்கு தான் ஓட்டு போடுவார். இந்த முறை பொண்ணு சொன்னதாக விசிலுக்கு ஓட்டு போட்டுள்ளார். இப்போது அதே பொண்ணு அடுத்த தேர்தல் வரும்போது உங்களுக்கு என்ன சின்னம் பிடிக்குமோ அதுக்கே போட்டு விடுங்கள் என சொல்லும் என நினைக்கிறேன்.

Also Read: உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!

அதனால் திமுக என்பது அனைவராலும் படிக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கமாகும். இடஒதுக்கீட்டுக்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கமாகும். இன்றைக்கு யார் கட்சி தொடங்கினாலும் தங்களுடைய கொள்கை தலைவர்களாக பெரியார், அம்பேத்கரை சொல்லியாக வேண்டும். திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என சொல்ல வேண்டும். அந்த நிலைமைக்கு தள்ளப்பட்டது தான் திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய சாதனையாகும் என சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article