மாணவர்கள் ஏமாந்துட்டாங்க.. தப்புக்கு பொறுப்பேற்கிறேன்.. சேலம் RR பிரியாணி ஓனர் வீடியோ!

மாணவர்கள் ஏமாந்துட்டாங்க.. தப்புக்கு பொறுப்பேற்கிறேன்.. சேலம் RR பிரியாணி ஓனர் வீடியோ!
News Image

கேட்டரிங் கல்லூரி தொடங்கி தங்களை ஏமாற்றி விட்டதாக  மாணவர்கள் தெரிவித்த குற்றச்சாட்டிற்கு சேலம் ஆர்.ஆர்.பிரியாணி உரிமையாளர் மன்னை தமிழ்ச்செல்வன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?

தமிழ்நாட்டில் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடை மிகவும் பேமஸாக உள்ளது. அதன் உரிமையாளரான மன்னன் ஆர். தமிழ்ச்செல்வன் வாழ்க்கையில் உயர நினைக்கும் பலரும் இன்ஸ்பிரேஷனாக உள்ளார்.  இப்படியான நிலையில் கிருஷ்ணகிரி சமத்துவப்புரம் பகுதியில் உள்ள ரிம்ஸ் கல்லூரி வளாகத்தில் சேலம் ஆர்.ஆர். பிரியாணி கேட்டரிங் கல்லூரி வளாகம் செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பான விளம்பரத்தில் படித்துக் கொண்டிருக்கும்போதே ரூ.40 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என மன்னன் ஆர். தமிழ்ச்செல்வன் வீடியோ வெளியிட்டிருந்தார். இதனைப் பார்த்து ஏகப்பட்ட மாணவர்கள் பலரும் அந்த கல்லூரியில் அட்மிஷன் போட்டனர்.

ஆனால் 2 ஆண்டுகளில் கல்லூரியை இழுத்து மூடி தங்கள் கனவில் நிர்வாகம் மண் அள்ளி போட்டு விட்டதாக மாணவர்கள் புலம்பி தவிக்கின்றனர். உணவு, தங்குமிடம் இலவசம் என கூறிய கல்லூரி நிர்வாகம் அந்த செலவை எங்கள் மீது திணிக்கிறது. ரூ.4 ஆயிரம் கூட ஊதியம் இல்லாத பார்ட் டைம் வேலைக்கு அனுப்பியதோடு மட்டுமல்லாமல் அந்த பணத்தில் பாதியை பெற்றுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. தங்களின் அசல் சான்றிதழ், படித்ததற்கான சான்றிதழ் என எதுவும் தராமல் இழுத்தடிப்பதாகவும் குற்றம் சாட்டி  மீது  மாணவர்கள் தரப்பில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Also Read: ஜனநாயகன் படத்துக்கு லீவு கேட்ட அமைச்சர்.. அனுமதி கொடுப்பாரா முதல்வர் விஜய்!

2024ல் இருந்தது போல இப்போது காலேஜ் இல்லை. முதல் 3 மாதங்கள் மட்டுமே நன்றாக இருந்தது. கல்லூரியில் இப்போது யாருமே கிடையாது என மாணவர்கள் தவித்து வருகின்றனர். வெளிநாட்டில் வேலை, 5 ஸ்டார், 7 ஸ்டார் ஹோட்டலில் பயிற்சி என சொல்லி விட்டு எதுவும் செய்யவில்லை. ஆர்.ஆர். கல்லூரியில் படித்த தாங்கள் பெட்ரோல் பங்க் மற்றும் கம்பி கட்டும் சென்ட்ரிங் பணியில் ஈடுபடுகிறோம் என புலம்பி தவித்து வந்த நிலையில் தான் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தவறுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்

இந்த நிலையில் இதற்கு பதிலளித்த சேலம் ஆர்.ஆர். பிரியாணி உரிமையாளர் மன்னன் தமிழ்ச்செல்வன், “கிருஷ்ணகிரி கல்லூரி தொடர்பாக தகவலறிந்தேன். அந்த மாணவர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு அந்த கல்லூரி தொடங்குவதில் உடன்பாடில்லை. என்னுடைய நேரடி பார்வையில் அந்த கல்லூரி கிடையாது. என் நண்பர்களிடம் இதை நேராக கவனிக்க முடியாது என சொன்னேன்.

அந்த கல்லூரி திறப்பு விழாவுக்கு மட்டும் போனேன். எனினும் சேர்ந்தவர்களுக்கு சான்றிதழ் எல்லாம் கொடுக்க வேண்டும் என சொன்னார்கள். 25 மாணவர்கள் தான் படித்த நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது என தெரியாது. ஊடகமோ அல்லது பாதிக்கப்பட்ட மாணவர்களோ என்னை அணுகி விளக்கம் கேட்டிருக்கலாம். என் கவனத்திற்கு வந்ததுமே சான்றிதழ் வாங்கி கொடுக்கும் பணியில் ஈடுபட தொடங்கி விட்டேன். எல்லா தவறுகளுக்கும் நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். நான் என் கடையில் பணியாற்ற வைக்க விரும்பி தான் அப்படி சொன்னேன். ஆனால் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவேன் என கூறவில்லை. என் கடையில் ஆள் பற்றாக்குறை இருப்பதால் தான் படிக்கும்போது வேலை வாங்கி கொள்ளலாம் என நினைத்தேன். எனினும் சென்னையில் தான் எனக்கு கல்லூரி தொடங்க வேண்டும் என விருப்பமாக இருந்தது. விரைவில் நான் தொடங்குவேன் என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks