Rohit Sharma: லார்ட்ஸில் சதமடித்து சரித்தரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்

Rohit Sharma: லார்ட்ஸில் சதமடித்து சரித்தரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
News Image

Rohit Sharma On Retirement: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் ரோகித் சர்மா 138 ரன்களை விளாசினார்.

ரோகித் சர்மா வரலாற்று சாதனை:

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையில் இருந்த சூழலில், கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. கடைசி நேரத்தில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்க, 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 387 ரன்களை சேர்த்தது. கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி வலுவான தொடக்கத்தை பெற்றாலும், இமாலய இலக்கை எட்ட முடியாமல் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தொடரை இழந்தது. இருப்பினும், ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரலாற்று சிறப்புமிக்க சதத்தை விளாசி, தனது ஓய்வு தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

லார்ட்ஸில் சதமடித்த முதல் இந்தியர்:

மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் கில் மற்றும் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 147 ரன்கள் சேர்க்க, கில் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய ரோகித் சர்மா, அரைசதத்தை பூர்த்தி செய்த பிறகு அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கினார். இதன் மூலம் தனது 34வது பூர்த்தி செய்ததோடு, இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடிக்க தொடங்கினார். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஒருகட்டத்தில் தசைபிடிப்பால் அவதிப்பட்ட அவர், இனி ஓட முடியாது என உணர்ந்த ரோகித், பவுண்டரி மற்றும் சிக்சர்களை மட்டுமே குறிவைத்து அடித்தார். அதன் விளைவாக110 பந்துகளில் 138 ரன்களை எடுத்து இருந்தபோது ஆட்டமிழந்தார். இடந்த இன்னிங்ஸ் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்தது.

வரலாற்று சாதனை படைத்த ரோகித் சர்மா:

இதன் விளைவாக லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்ற முக்கியத்துவமான பெருமையை ரோகித் சர்மா தனதாக்கியுள்ளார். கடந்த 1975ம் ஆண்டு முதல் இந்திய அணி பல்வேறு போட்டிகளில் இங்கு களமிறங்கினாலும், 51 ஆண்டுகளில் அங்கு சதமடித்த முதல் வீரரானார் ரோகித் சர்மா. முன்னதாக 2004ம் ஆண்டு கங்குலி அடித்த 90 ரன்களே அதிகபட்சமாக இருந்தது. இதுபோக இந்திய அணிக்காக அதிக வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையையும் 39 வயது 80 நாட்களில் ரோகித் படைத்துள்ளார். முன்னதாக 38 வயது 327 நாட்களில் சதம் அடித்து சச்சின் இந்த சாதனையை தனது வசம் வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், மோசமான ஃபார்மில் இருப்பதால் லார்ட்ஸ் போட்டியுடன் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என கூறப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 2027 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருக்கிறார் என்பதையும் உணர முடிகிறது.

இதையும் படியுங்கள்: FIFA Argentina Vs Spain: ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?

ரோகித் ஓய்வு - கேப்டன் கில் விளக்கம்

போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் கில்லிடம், ரோகித் சர்மாவின் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அவர் எங்களிடம் எதுவும் கூறவில்லை. இதுபற்றி ஊடகங்களில் எல்லாம் வெளியாகிவிட்டது என்று நினைக்கிறேன், ஆனால் அணிக்குள் அதுபோல எந்த விவாதமும் நடக்கவில்லை” என கில் தெரிவித்துள்ளார். இதனால் ரோகித் சர்மா தொடர்ந்து விளையாடுவது உறுதியாகியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks