Rohit Sharma: ”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை

Rohit Sharma: ”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
News Image

Rohit Sharma BCCI: இங்கிலாந்து அணிக்கு எதிராக வரும் 19ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியுடன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவார் என தகவல்கள் பரவுவது குறிப்பிடத்தக்கது.

ரோகித் ஓய்வு? - பிசிசிஐ மறுப்பு

இங்கிலாந்து அணிக்கு எதிராக வரும் 19ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியுடன், முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவார் என பரவிய தகவலை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார். முன்னாள் கேப்டனின் ஓய்வு தொடர்பான வதந்திகளை நிராகரித்ததோடு, மூத்த தொடக்க வீரர் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பார் எனவும் உறுதியளித்துள்ளார். இங்கிலாந்து தொடருக்குப் பிறகு இந்திய அணிக்கான வீரர்களின் பட்டியலில் வழக்கமான தேர்வாக ரோகித் சர்மா இருக்கமாட்டார் எனவும், 2027ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்காக சரியான வீரர்களை தேர்வு செய்ய தேர்வுக்குழு தீவிரம் காட்டுவதாகவும் வெளியான தகவலுக்கு மத்தியில் பிசிசிஐ இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

ரோகித் சர்மா தொடர்ந்து விளையாடுவார் - பிசிசிஐ

ரோகித் சர்மாவின் ஓய்வு தொடர்பாக பேசுகையில், “ரோகித்தின் எதிர்காலம் குறித்து ஊடகங்களில் பல யூகங்கள் பரவி வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸில் அவர் தனது கடைசிப் போட்டியில் விளையாடுவார் என்றெல்லாம் எந்த விவாதமும் நடைபெறவில்லை என்பதை நான் உறுதியாகக் கூற விரும்புகிறேன். ரோகித் இந்திய ஒருநாள் அணியின் நிரந்தர உறுப்பினர். அவர் அணியில் இருக்கும் வரை நாட்டிற்காக தொடர்ந்து விளையாடுவார். வேறுவிதமாகக் கூறினால், லார்ட்ஸில் நடைபெறும் ஒருநாள் போட்டி அவருடைய கடைசிப் போட்டியாக இருக்காது” என தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.

இரண்டாவது போட்டியின் தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பயிற்சியாளர் குழுவை சேர்ந்த சிதான்ஷு கோடக், “ரோகித் போன்ற ஒரு பெரிய வீரருக்கு எந்தவிதமான அழுத்தமும் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதை உணரும் அளவுக்கு அவர் ஒரு சிறந்த வீரர் அல்ல. ஆம், முதல் இரண்டு போட்டிகளில் அவர் ரன்கள் எடுக்கவில்லை, ஆனால் அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

ரோகித்திற்கு நெருக்கடி..

2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை விளையாட வேண்டும் என்ற தனது விருப்பத்தை ரோகித் பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் 11 மற்றும் 26 என்ற ரன்களை மட்டுமே எடுத்தார். விராட் கோலியின் ஃபார்ம் மற்றும் உடற்தகுதியைக் கருத்தில் கொண்டு அவர் அணியில் நீடிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை எனவும், ஆனால் ரோகித்திற்கு அந்த சூழல் இல்லை எனவும் கூறப்படுகிறது. அவரது டெஸ்ட் ஓய்வு விஷயத்தில் தேர்வுக் குழுவிற்கும் ரோகித்திற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 39 வயதான அவர் கடந்த  2007ம் ஆண்டு ஜூன் 23 அன்று பெல்ஃபாஸ்டில் அயர்லாந்துக்கு எதிராக தனது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் அறிமுகமானார். ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டு வடிவ கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: TN Weather Update: சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை

மோசமான ஃபார்மில் ரோகித் சர்மா..!

ரோகித் சர்மா மோசமான ஃபார்மில் இருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கடைசியாக விளையாடிய 8 போட்டிகளில் 241 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். இதில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடங்கும். இந்நிலையில் இன்று நடைபெறும் தொடரை வெல்வது யார் என்பதை இறுதி செய்யும், இங்கிலாந்து அணிக்கான மூன்றாவது போட்டியில் ரோகித் சர்மா தனது பங்களிப்பை வழங்கி தனக்கான இடத்தை உறுதி செய்வாரா? என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks