RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்

RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
News Image

RB Udhayakumar On CM Vijay: விஜயின் ரீல்ஸிற்கு ஒரு மணி நேரத்தில் ஒரு கோடி பேர் லைக் போட்டதை பார்த்து நெஞ்சு வலி வந்துவிட்டது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வேலையில்லாமல் அமரவைத்த விசில்

சிவகங்கையில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் அக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்று உரையாற்றினார். அப்போது  சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருக்கின்றன. திடீரென பார்த்தால் பாதி வாக்குகள் விசிலுக்கு சென்று கொண்டிருந்தன. ஒரு இடத்தில் கூட விசில் வரையப்படவே இல்லையே. ஒன்றியம் என்னை பார்க்கிறார், நான் ஒன்றியத்தை பார்க்கிறேன். சிவகங்கையில் அதிமுகவினர் முன்னிறுத்திய வேட்பாளர்கள் எல்லாம் தோற்கிற வேட்பாளர்கள? இதைவிட சிறந்த வேட்பாளர்களை யார் களமிறக்க முடியும்ஒருநாள் சட்டசபை கூடுகிறதே இருந்துவிட்டு போகலாமே என சொன்னால் கூட அங்கு எனக்கு 100 வேலைகள் இருக்கிறது என சொல்பவர்கள் தான் நமது சட்டமன்ற உறுப்பினர்கள். ஆனால் தற்போது அவர்களை வேலையே இல்லாமல் விசில்காரர்கள் வீட்டில் அமர செய்துவிட்டார்கள். சொல்வதை கேட்க வேண்டும் என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன். இந்த பூத்தில் பதிவான 500 வாக்குகளில் 300 வாக்குகள் நமக்கு வருமே என விசாரித்தால், 150 இரட்டை இலைக்கு 150 விசிலுக்கு என கூறுகின்றனர்.

சொந்த ஏரியாவிலேயே ஆப்பு

சரி, நம்ம ஏரியா வரட்டும் என சொன்னால் அங்கு தான் அதிகமாக ஆப்பு வைத்து இருக்கிறார்கள். ஏனென்றால் நம்மாட்கள் எல்லாம் தெருமுனைக்கூட்டம் பொதுக்கூட்டம், தேர்தல் பரப்புரை மற்றும் ஆரத்தி என தீவிரமாக இருந்துள்ளனர். அடேங்கப்பா அந்த ஆரத்தி எடுக்குற கொடுமை இருக்கே. 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு நின்றார்கள். இதையெல்லாம் பார்த்து நான் மயங்கி விழுந்துவிடுவேன். இங்க இருக்கிறதே 1500 ஓட்டு தானே எப்படி இவ்ளோ கூட்டம் என கேட்டால், மொத்த தொகுதியையும் திரடிவிட்டோம் என்பார்கள். எதற்கு என்றால்? அமைச்சர் கோபம் கொள்ளக்கூடாது என்பதற்காகவாம். சரி நமக்கு செல்வாக்கு கொடிகட்டி பறக்குது. எடப்பாடியார் உடன் நாம் தான் நிறக்கப்போகிறோம். பக்கத்திலேயே அமர வைத்து இருக்கிறார். அவர் நிலவரம் என்னவென்று கேட்கும்போது கூட சூப்பராக இருக்கிறது அண்ணா. நமது வேட்பாளர் செந்தில்நாதன் டாப்பாக வந்துவிடுவார். சோழவந்தான் பிச்சுகிட்டு போயிடுவார். உசிலம்பட்டியில் எதிர்க்கட்சிகளால் பக்கத்தில் கூட வரமுடியாது அண்ணா என்றேன். நல்லது அப்படியே தொடருங்கள் எடப்பாடியார் அறிவுறுத்தினார்.

ரீல்ஸ் போட்ட தவெக

வாக்குகளை எண்ணிக்கொண்டு இருக்கிறோம். விசில் விசில் என சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். என்ன தான் நடந்துச்சு என அருகிலிருந்தவர்களிடம் விசாரித்தேன். அண்ணா, நாம் ஆரத்தி எடுக்க சென்றோமா, சப்பாடு போட்டோமா, கிரிக்கெட் பேட் கொடுத்தோமா, அந்த நேரங்களில் அவர்கள் வீட்டிலிருந்து ரீல்ஸை தட்டிவிட்டுள்ளனர் அண்ணா. 41 நாட்கள் விஜய் வெளியிலேயே வராமல் இருந்தார் அல்லவா, அதோடு அவரது கதை முடிந்தது என நினைத்துக் கொண்டிருந்தோம். அவர்கள் உடனே ஒரு சிந்தனையை செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

நெஞ்சு வலியே வந்துவிட்டது

41 நாட்கள் விஜய் வெளியே வரவே இல்லையே, மக்கள் என்ன நினைப்பார்கள், எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன என்று. உடனடியாக சினிமா எழுத்தாளரை அழைத்து இதற்கு என்ன தீர்வு என விசாரிக்கிறார். அதன்படி அவர் எழுதி கொடுத்த வசனத்தை பேசி ரீல்ஸ் வெளியிடுகிறார். அதை பார்த்ததும் அடிச்சான்டா நம்ம தலைவன், சூப்பர் டா டேய் என குதிக்கின்றனர். என்ன சொல்லிவிட்டார்? பலியானவர்களின் வீட்டிற்கு கூட செல்லாமல் தனது வீட்டிற்குள் ஒளிந்துகொண்டு ரீல்ஸ் போடுகிறார் அதற்கு லைக்ஸ் போடுகிறார்கள். ஒரு மணி நேரத்தில் அதை பார்த்ததும் எனக்கு நெஞ்சு வலியே வந்துருச்சு.  ஒரு கோடி பேர் லைக் போட்டுள்ளனர். இப்ப வந்த படத்தில் எல்லாம் வசனம் உள்ளதாம். நீங்களா பேசுனா ஸ்பீச்சு, தளபதி பேசுனா ரீச்சு என. நான் இன்னும் படம் பார்க்கவில்லை. அப்போது நாங்கள் எல்லாம் என்ன தான் செய்வது? என்ன பேசினார் அவர்? இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர்” என பல இடங்களில் விஜயை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஒருமையிலும் காட்டமாக விமர்சித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks