Raja Kannappan: அசால்ட்டா இருந்துட்டோம்.. தவெக வந்துட்டு.. இனி நாங்க தான்.. ராஜகண்ணப்பன் சவால்!

Raja Kannappan: அசால்ட்டா இருந்துட்டோம்.. தவெக வந்துட்டு.. இனி நாங்க தான்.. ராஜகண்ணப்பன் சவால்!
News Image

2026 சட்டமன்ற தேர்தலில் வேகமாக வேலை செய்து இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என திமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

திமுக அரசில் அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் 2026 சட்டமன்ற தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இதனிடையே தன் தொகுதி மக்களுக்கு அவர் நேற்று திறந்தவெளி வாகனத்தில் சென்று நன்றி தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், “நம்முடைய முதலமைச்சர் விஜய் எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. எம்ஜிஆர் திமுகவில் 30 ஆண்டுகள் இருந்தார். அதனால் அவரை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டோம். எம்ஜிஆர் என்பது வேறு, இவர் என்பது வேறு. திமுக இம்மானுவேல் சேகரனுக்கு கூட நாம்  வேலை செய்துள்ளோம். திமுகவில் சாதி, மதம் எதுவும் பார்ப்பதில்லை. கொஞ்சம் ஏமாந்து விட்டோம்.  நாம் வெற்றி, தோல்வியைப் பார்த்தவர்கள். 73 இடங்களில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். கொஞ்சம் வேகமாக வேலை செய்து இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். நம் கட்சியினர் கொஞ்சம் அசால்ட்டாக இருந்து விட்டனர். தவெகவினர் ஓட்டு கேட்கவில்லை. ஆனால் மக்கள் ஓட்டு போட்டு விட்டார்கள். மக்கள் செய்த தவறுக்கு இன்றைக்கு அனுபவிக்கிறார்கள்.

எனினும் திமுக தன் கடமையில் இருந்து தவறுவதில்லை. இன்னும் பல ஆண்டுகள் திமுக வெற்றி பெற வேண்டும். நாம் எல்லா வசதிகளையும் செய்துக் கொடுத்தோம். ஆனால் மக்களுக்கு தவெகவினர் தான் வேண்டும் என நினைத்து விட்டனர். நான் கொளத்தூரில் உள்ள மருத்துவமனைக்கு போய் மக்களிடம் ஸ்டாலின் தோற்றது பற்றி கேட்டேன். அதற்கு அவர்கள் நாங்கள் எல்லாரும் அவருக்கு தான் போட்டோம். இளம் வயதினர் தான் தவெகவுக்கு ஓட்டு போட்டனர் என தெரிவித்தார்கள். சிறுவர்கள் எல்லாரும் இந்த ஒருவாட்டி போடுங்க என சொல்லியதால் போட்டு விட்டார்கள்.

முன்னாள் குடியரசுத்தலைவரின் உதவியாளராக இருந்த பொன்ராஜ் என்னிடம் சொன்னார். 2 ஓட்டுகள் திமுகவுக்கு விழுகிறது என்றால் மூன்றாவது ஓட்டு தமிழக வெற்றிக் கழகத்திற்கு தான் செல்கிறது என கூறினார். முதலில் விஜய் என சொன்னார், இப்போது ஜோசப் விஜய் என சொல்கிறார். நான் தவெகவுக்கு 30 ஆயிரம் ஓட்டுகள் விழும் என நினைத்தேன். 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் நான் ஜெயிப்பேன் என நினைத்தேன். கடைசியில் 16,598 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தேன். திமுகவுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் கிடைத்தது.

Also Read: Jananayagan: ஜனநாயகன் படத்தை தப்பா சொல்லணும்.. திமுக தரப்பில் பணப்பேரம்?.. வெளியான ஸ்க்ரீன்ஷாட்!

பொதுமக்களுக்கு ஆளுங்கட்சியாக இல்லையென்றாலும் நான் என்ன வேண்டுமானாலும் செய்துக் கொடுக்க தயாராக இருக்கிறேன். மக்கள் உணர வேண்டும். யார் வந்தால் வேலை செய்வார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். திமுகவை யாரும் ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது. திமுக தான் தமிழ்நாட்டை ஆளும். முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் வருவார். எனக்கு வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks