PM Modi CJP Protest: இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் மூலம் வினாத்தாள் கசிவிற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என, பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ:

நீட் வினாத்தாள் கசிவிற்கு எதிராக டெல்லியில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா, நீர் தேர்வு ரத்தால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்நிலையில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் முடிவில் நள்ளிரவில் அவர் வெளியிட்ட வீடியோவில், ”வினாத்தாள் கசிவு தொடர்பாக இன்றைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும், வினாத்தாள் கசிவிற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என உறுதியளித்துள்ளார்.

மாணவர்களுக்கு பிரதமர் மோடி உறுதி

சுமார் 3 நிமிடங்களுக்கான அந்த வீடியோவில், “தேர்வு வினாத்தாள் கசிவுகளால் ஏற்படும் வேதனையை அரசாங்கம் புரிந்துகொள்கிறது. இது லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு ஆழ்ந்த கவலையளிக்கும் விஷயம். கடந்த இரண்டரை மாதங்களில், பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, குறிப்பிடத்தக்க நடவடிக்கை ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரு கல்வியாண்டை இழக்காமல் இருப்பதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் உடனடி முன்னுரிமையாகும். சுமார் 22 லட்சம் தேர்வர்களுக்கு மிகக் குறுகிய காலத்தில் தேர்வுகளை விரைவாக நடத்தப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் ஜூலை 19 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளோடு அரசு நின்றுவிடத் தயாராக இல்லை.

அமைச்சரவை கூட்டம்:

வினாத்தாள் கசிவு வழக்குகளில் விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளுக்கு வழிவகுக்கும் ஒரு சட்ட வரைவைத் தயாரிக்குமாறு துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த வரைவை நிறைவு செய்வதற்காக அதிகாரிகள் இரவு முழுவதும் பணியாற்றுகின்றனர். அது விவாதத்திற்காக வெள்ளிக்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் . அமைச்சரவை சகாக்களின் ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த முன்மொழிவு இறுதி செய்யப்படும். திங்கட்கிழமை நாடாளுமன்றம் தனது இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைப்பதால், அரசாங்கம் இந்தச் சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தி நிறைவேற்ற முயலும். விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளை முன்மொழியும் ஒரு வரைவு மசோதா குறித்து வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்” என பிரதமர் மோடி தனது வீடியோவில் உறுதியளித்துள்ளார்.

More strict actions against paper leaks to come in tomorrow’s Cabinet! pic.twitter.com/NRysBukk5U

— Narendra Modi (@narendramodi) July 23, 2026

மத்திய அமைச்சர் ராஜினாமா?

வினாத்தாள் கசிவு காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு அறிவிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட, நாடு முழுவதும் சுமார் 20 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என போராட்டக்கார்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதுதொடர்பாக அரசு இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article