PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
News Image

PF கணக்கு வைத்திருக்கும் கோடிக்கணக்கான சந்தாதாரர்களுக்கு EPFO அமைப்பு ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. இதன்படி வரும் 15ஆம் தேதி முதல் உங்கள் BF கணக்கில் இருக்கும் பணத்தின் அளவு அதிகரிக்க போகிறது.

இந்தியாவில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஓய்வு கால நிதிபாதுகாப்பை வழங்கவே PF திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஊழியர் பெயரில் PF கணக்கு தொடங்கப்பட்டு மாதம் தோறும் பணம் வரவு வைக்கப்படுகிறது. இந்த பணத்தில் அரசு சார்பாக ஆண்டுக்கு 8.25% வட்டியும் வழங்கப்படுகிறது. காம்பவுண்டிங் முறையில் இந்த பணம் வளர்ச்சி அடைந்து ஓய்வு காலத்தில் பெரிய நிதியாக கைக்கு கிடைக்கும்.

அந்த வகையில் 2025-26 நிதியாண்டிற்கான 8.25 சதவீத வட்டி தொகையை, வரும் ஜூலை 15ஆம் தேதிக்குள் சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அறிவித்துள்ளது. EPFO-வில் வட்டி மாதாந்திர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது, ஆனால் அது நிதியாண்டின் இறுதியில் தான் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதனை PF கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்து கொள்வது அவசியம்.

ஒவ்வொரு மாதமும் உங்கள் PF கணக்கில் உள்ள மாதாந்திர பேலன்ஸ் தொகை அடிப்படையிலேயே வட்டி கணக்கிடப்படுகிறது. உதாரணமாக ஜூலை மாதம் உங்கள் கணக்கில் 1,00,000 ரூபாய் இருந்தால் அந்த பணத்திற்கு வட்டி கணக்கிடப்படும், அடுத்த மாதம் 1,02,600 ரூபாய் இருந்தால் அதற்கு வட்டி கணக்கிடப்படும். ஆனால் இந்த பணம் மொத்தமாக ஆண்டு இறுதியில் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இந்தியாவின் நிதியாண்டு ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் என்பதால் அந்த மாதங்களுக்கு தான் வட்டி கணக்கிடப்படுகிறது. ஆண்டுக்கு 8.25% என நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தை, 12 மாதங்களால் வகுத்து, ஒவ்வொரு மாதத்திற்கும் தனித்தனியாக வட்டி கணக்கிடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான வட்டி 15ஆம் தேதிக்குள் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் PF கணக்கு வைத்திருப்பவர்கள், ஜூலை 15-ஆம் தேதிக்கு பிறகு, தங்கள் PF  கணக்கின் பாஸ்புக்கை சரிபார்த்து, வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். EPFO-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது UMANG செயலி மூலம் இந்த விவரங்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks