நான்கு வழிச்சாலைக்காக நிலம் வழங்கி இழப்பீடு பெறாதவர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஒ.சுகபுத்ரா, தகவல்.

சிறப்பு முகாம் கிராம நிர்வாக அலுவலங்களில் நடைபெற உள்ளது.

விருதுநகர் மாவட்டம் வடுகபட்டி – தெற்குவெங்காநல்லூர் வரை தேசிய நெடுஞ்சாலை - 744 அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குரிய நில உடைமைதாரர்களிடமிருந்து ஆவணங்களை பெற்று கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கும் பொருட்டு நில உடைமைதாரர்களிடமிருந்து நில ஆவணங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் கிராம நிர்வாக அலுவலங்களில் நடைபெற உள்ளது.

குன்னூர் கிராமத்திலும் நடைபெற உள்ளது.

அதனடிப்படையில் , இராஜபாளையம் வட்டத்தில் 15.07.2026 மேலராஜகுலராமன் கிராமத்திலும், 16.07.2026 மேலூர் துரைசாமிபுரம் கிராமத்திலும், 21.07.2026 சமுசிகாபுரம் கிராமத்திலும், 23.07.2026 இளந்திரைகொண்டான் கிராமத்திலும், 28.07.2026 தெற்குவெங்காநல்லூர் கிராமத்திலும், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் 15.07.2026 அத்திகுளம் செங்குளம் கிராமத்திலும், 21.07.2026 முத்துவெங்கட்ராயபுரம் கிராமத்திலும் 23.07.2026 விழுப்பனூர் கிராமத்திலும், 28.07.2026 குன்னூர் கிராமத்திலும் நடைபெற உள்ளது.

ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெற்றுக் கொள்ளலாம்

மேலும், திருவில்லிபுத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 17.07.2026 அன்று காலை 11.00 மணிக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. ஆகவே, தேசிய நெடுஞ்சாலை – 744 அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான உரிமை குறித்த ஆவணங்களை இதுவரை சமர்ப்பிக்காத நிலஉடைமைதாரர்கள் இம்முகாம்களில் கலந்து கொண்டு ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article