NEET Protest : ’ரீமாண்ட் பண்ணிடுவேன்’ மாணவர்களை எச்சரித்த SI – நடந்தது என்ன ?

NEET Protest : ’ரீமாண்ட் பண்ணிடுவேன்’ மாணவர்களை எச்சரித்த SI – நடந்தது என்ன ?
News Image

தலைநகரான டெல்லியில் நீட் முறைகேட்டை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்யவும் கோரி இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராடி வருகின்றார்கள். குறிப்பாக, கரப்பான் பூச்சி கட்சியை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் பெரும் பங்காற்றி வரும் நிலையில், நாடு முழுவதும் இடது சாரி இயக்க மாணவர் அணியினரும் அவர்களுடன் கைகோத்து போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டில் பரவிய போராட்டம்

சென்னையின் பல இடங்களில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், மாணவ இயக்கங்கள் போராடத் தொடங்கியுள்ளன. தி.நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட தனி இடமே ஒதுக்கி தரப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தொடக்கம் முதலே நீட் தேர்வுக்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் மாநிலத்தின் பல பகுதிகளில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட SFI மாணவ அமைப்பினர்

இதனையடுத்து சென்னை திருவொற்றியூர் அரசு கல்லூரிக்கு சென்ற SFI மாணவர்கள் சுமார் 20 பேர் கல்லூரி மாணவர்களை போராட்ட களத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கல்லூரி நிர்வாகம் சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாடவேளையில் மாணவர்களை வெளியில் இருந்து வந்தவர்கள் தொந்தரவு செய்வதாக கூறி காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கல்லூரி வந்த போலீசார்

இதனையடுத்து, அரசு கல்லூரிக்கு வந்த காவல்துறையினர் வகுப்பில் இருக்கும் மாணவர்களை போராட்டத்திற்கு அழைக்கக் கூடாது என கூறியுள்ளனர். இதனால், காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது தள்ளுமுள்ளுவாக மாறியிருக்கிறது. இந்நிலையில், எஸ்.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இமானுவேல், சஞ்சய் உள்ளிட்ட 4 மாணவர்களை விசாரணைக்காக காவல்துறையினர் தங்களுடைய போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயற்சித்துள்ளார். ஆனால், அதற்கு பிற மாணவர்களும் மாணவிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டிருக்கின்றனர்.

A scuffle broke out between police personnel and members of the SFI after the student organisation called on students of Thiruvottiyur Government Arts College to join the anti-NEET protest. pic.twitter.com/tZWM94fn1T
— Raja Shanmugasundaram (@SRajaJourno) July 22, 2026

ரீமாண்ட் பண்ணிடுவேன் – எச்சரித்த எஸ்.ஐ.

இதனையடுத்து, தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட மாணவர்களை பார்த்து ஆவேசமடைந்த காவல்துறையினர் படிக்கிற வேலையை விட்டுட்டு என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க? என்று கேள்வி எழுப்பியதாகவும், தேவையில்லாமல் பிரச்னை செய்தால் ‘ரீமாண்ட்’ செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks