Parliament Monsoon Session: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இன்று தொடங்கி ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரம் வரை நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்:

பரபரப்புக்கு சற்றும் பஞ்சமில்லாமல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. பிறப்பு & இறப்பு பதிவு தொடர்பான மசோதா உட்பட 5 புதிய மசோதாக்களயும், ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட 2 மசோதாக்களையும் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம், மத்திய அரசு பட்டியலிடாத, அக்கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு முக்கிய பிரச்னைகள் தொடர்பாக கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. சட்டமன்றத்தில் ஏற்படும் எந்தவொரு இடையூறும் அரசியல் ரீதியாகப் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகளை அரசு தரப்பு எச்சரித்துள்ளது. இதனால் மழைக்கால கூட்டத்தொடர் எப்படி நடைபெறபோகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் பிரச்னைகள்:

அயோத்தி ராமர் கோயிலில் நடைபெற்ற நிதி முறைகேடு, நீட்-யுஜி வினாத்தாள் கசிவுப் பிரச்சினையை எழுப்பி, ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தாதது, எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு, அரசு தேர்வுகளில் தொடர்ந்து அரங்கேறி வரும் முறைகேடுகள், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை, மேற்குவங்கத்தில் மாற்றுக் கட்சியில் இணைந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்களை அங்கீகரித்தது, எரிபொருட்களின் விலை உயர்வு போன்றவை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப தயாராகி வருகின்றன.

மத்திய அரசின் மசோதாக்கள்:

வருமான வரி (திருத்த) மசோதா, 2026

உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026

பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு (திருத்த) மசோதா, 2026

தேசிய கௌரவத்திற்கு அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு (திருத்த) மசோதா, 2026

ஆகிய ஐந்து மசோதாக்கள் நடப்பு கூட்டத்தொடரில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன, இதுபோக வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா மற்றும் விக்சித் பாரத் கல்வி நிறுவன மசோதா ஆகிய ஏற்கனவே அவையில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு மசோதாக்களையும் இந்த கூட்டத்தொடரில் சட்டமாக்க அரசு தீவிரம் காட்டுகிறது.

இதையும் படியுங்கள்: Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்

தொகுதி மறுவரையறை மசோதா?

கடந்த கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தேவையான மூன்றில் இரண்டு பங்கு இல்லாததால் தோல்வியுற்ற, தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் கொண்டுவரப்படுமா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. இருப்பினும் கூட்டத்தொடரின் போது அலுவல் ஆலோசனைக் குழுவில்விவாதித்த பிறகு, எதிர்க்கட்சிகளும் விதிகளுக்கு இணங்குவதற்கு ஏதுவாக அரசு ஒரு புதிய அம்சத்தைக் கொண்டு வரலாம் என்றும், இது ஒரு பொதுவான நடைமுறை என்றும் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இந்த மசோதாவால் 2029 முதல் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது மட்டுமின்றி, மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது போன்றவை சட்டமாகக் கூடும். இந்த மசோதா சட்டமாவதில் திமுகவின் நிலைப்பாடு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

Source: Read Full Article