Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்

Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
News Image

Parliament Monsoon Bills: தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுமா? என பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மழைக்கால கூட்டத்தொடர் - புதிய மசோதாக்கள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. அதேநேரம், புதியதாக 2 மசோதாக்களையும் ,ஏற்கனவே அவையில் அறிமுகப்படுத்தப்பட்ட 2 மசோதாக்களையும் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அவ்வாறு புதியதாக அறிமுகப்படுத்த வாய்ப்புள்ள மசோதாக்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

5 புதிய மசோதாக்களின் விவரங்கள்:

1. வருமான வரி (திருத்த) மசோதா, 2026: இது முந்தைய அவசரச் சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவரப்படுகிறது. உலகளாவிய புவிசார் அரசியல் ஸ்திரமின்மை, கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி இடையூறுகளுக்கு மத்தியில், இந்தியாவின் இறையாண்மைக் கடன் சந்தையை வலுப்படுத்தவும், உலகளாவிய மூலதனப் பாய்ச்சல்களை ஈர்க்கவும், சந்தை வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது.

2. உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026: நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிப்பதற்கு வசதியாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை (இந்தியத் தலைமை நீதிபதியைத் தவிர்த்து) 33-லிருந்து 37-ஆக உயர்த்த முற்படும் மசோதாவும் கொண்டுவரப்பட உள்ளது

3. பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு (திருத்த) மசோதா, 2026: இந்த மசோதா, பிறப்பு மற்றும் இறப்புகளின் தாமதமான பதிவுக்கான விதிகளை மேலும் கடுமையாக்கவும், நெறிப்படுத்தவும், உண்மையான 1969 சட்டத்தின் (இது 2023-லும் திருத்தப்பட்டது) பிரிவு 13(3)-ஐத் திருத்தும்.

3. தேசிய கௌரவத்திற்கு அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026: இது தேசிய சின்னங்களை அவமதிக்கும் அல்லது தேசிய கௌரவத்தைக் குலைக்கும் செயல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்காக 1971 ஆம் ஆண்டு சட்டத்தைத் திருத்த முற்படுகிறது.

5. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு (திருத்த) மசோதா, 2026:  குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையில் 'வணிகம் செய்வதை எளிதாக்குதல்' மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான ஒழுங்குமுறைகளை ஊக்குவித்தல், தாமதமான கொடுப்பனவுகளைக் கையாள்வதற்கான வழிமுறையை வலுப்படுத்துதல் மற்றும் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிலுவையில் உள்ள இரண்டு மசோதாக்கள்:

1. வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா: வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை (FCRA) மசோதா மார்ச் 25 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பரிசீலனைக்கும் நிறைவேற்றத்திற்கும் எடுத்துக்கொள்ளப்படும். இந்தியாவிற்கு வரும் நிதிகளைக் கையாள்வதில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்: National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?

2. விக்சித் பாரத் கல்வி நிறுவன மசோதா, 2025: கடந்த ஆண்டின் டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட விக்சித் பாரத் கல்வி நிறுவன மசோதா, இரு அவைகளின் கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. மழைக்கால கூட்டத்தொடரில் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து விவதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாம்.

தொகுதி மறுவரையறை மசோதா எப்போது?

அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவதில் அரசுக்கு நம்பிக்கை ஏற்பட்ட பின்னரே, தொகுதி வரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை அரசு விவாதத்திற்கு கொண்டு வரும் என கூறப்படுகிறது. கூடுதலாக, சிறையில் உள்ள தலைவர்களிடமிருந்து அதிகாரத்தைப் பறிக்கவும், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தைச் செயல்படுத்தவும் அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks