MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?

MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
News Image

காவிரி நீர் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக கர்நாடகம் செல்லும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த காலங்களில் காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற யோசனை சொல்லப்பட்டபோதெல்லாம், அதனை உறுதியாகத் திராவிட முன்னேற்றக் கழக அரசு நிராகரித்தது.உரிமையை நிலைநாட்டுவதாக இல்லாமல் பிரச்சினையை இழுப்பதாகவே அப்பேச்சுவார்த்தைகள் அமையும். இந்நிலையில், கர்நாடகம் சென்று அம்மாநில முதலமைச்சருடன் தமிழ்நாடு முதலமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் என வேளாண்துறை அமைச்சரே தெரிவித்திருப்பது விவசாயிகள் மத்தியில் பெருங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தமிழ்நாடு அரசின் 30 ஆண்டுகாலச் சட்டப் போராட்டத்தைச் சிதைப்பதாக அமைந்துவிடும். கர்நாடகம் விரித்திருக்கும் சதிவலையில் வலியச் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் சிக்குவது ஏன்?. கர்நாடக மாநிலத்தை ஆள்வது காங்கிரஸ். தமிழ்நாடு அரசிலும் காங்கிரஸ் கட்சி பங்கு வகிக்கிறது. எனவே கண் கண்துடைப்புக்காக இதுபோன்ற பேச்சுவார்த்தை நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? காவிரி நீர் உரிமையின் ஆழ அகலங்களைப் புரிந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் தனது செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். காவிரி போன்ற தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினைகளில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனையையும் விவசாயச் சங்கங்களின் கருத்துகளையும் பெற்ற பின்பே செயல்பட வேண்டும்.காவிரி உரிமை தொடர்பாகப் பேச்சுவார்த்தைக்குக் கர்நாடகம் செல்லும் தவறான முயற்சியை முதலமைச்சர் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சரை, முதல்வர் விஜய் சந்திகக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks