Mayor Priya: அம்மா உணவகங்கள் தொடர்பாக சென்னை மேயர் பிரியா பேசிய வீடியோ ஒன்றும் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

அம்மா உணவகங்கள் யாரால் தரம் உயர்ந்தன?

தவெக ஆட்சியில் அம்மா உணவகங்களின் தரம் உயர்த்தப்பட்டதால், பயனர்களின் எண்ணிக்கை 55 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. நகரம் முழுவதும் உள்ள 383 அம்மா உணவங்களின் தினசரி பயனர்களின் எண்ணிக்கையானது சுமார் 67 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்தை கடந்துள்ளது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை குறிப்பிட்டு சென்னை மேயர் ப்ரியா ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சாராக பொறுப்பேற்றது முதலே அம்மா உணவகங்களை தரம் உயர்த்திடவும், மக்களுக்கு தரமான உணவு வகைகளை வழங்கிட தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக, 2022 ம் ஆண்டு முதல் அம்மா உணவங்கங்களின் தரமும், விற்பனையும் படிப்படியாக உயர்ந்து வந்துள்ளது.

”திமுகாவல் தான் அம்மா உணவகங்கள் மேம்பட்டன”

2025-26 ம் நிதியாண்டில்ரூ.7.06 கோடி செலவில் அம்மா உணவகங்களின், இயந்திரங்கள் மற்றும் பாத்திரங்கள் புதிதாக கொள்முதல் செய்யப்பட்டன. அம்மா உணவகங்களின் கட்டிடங்கள் புனரமைப்பு பணிகளுக்கு 2024-25 நிதியாண்டில் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 290 அம்மா உணவக கட்டிடங்களின் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாகவே, அம்மா உணவகங்களில் பயன்பெறும் எளிய மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததுடன், 2026 ஜனவரி மாத வருவாய் 1 கோடியே 13 லட்சத்தை எட்டியது. பின்னர் ஒவ்வொரு மாத வருவாயும் 1 கோடி ரூபாய்க்கு மேல் என்ற சராசரி நிலையில் நீடித்தும் வந்தது.

இந்நிலையில் தான் சர்வதேச போர் பதற்ற சூழலால் நாடு முழுவதும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அம்மா உணவகங்களுக்கு சமையல் எரிவாயு கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் உணவு தயாரிப்பு அளவும், விற்பனையும் ஏப்ரல் மாதம் மட்டுமே சரிந்தது. பின்னர், மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையால், மே மாதம், ஜுன் மாதங்களில் மீண்டும் விற்பனை முந்தைய நிலையை (ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை) எட்டியது” என தற்போதைய தவெக அரசால் அல்லாமல் முந்தைய திமுக ஆட்சியால் தான் அம்மா உணவங்கள் வளர்ச்சி கண்டுள்ளன என மேயர் ப்ரியா குறிப்பிட்டுள்ளார்.

மேயர் ப்ரியாவை ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்

மேயர் ப்ரியாவின் கருத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். அதோடு, அம்மா உணவகங்கள் தொடர்பாக அவர் பேசிய பழைய வீடியோ ஒன்றும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அரசியல் விமர்சகரான சுமந்த் சி ராமன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “திமுக ஆட்சிக்காலத்தில் அம்மா உணவகங்களை எப்படிச் சீரழிய விட்டார்கள் என்பது சென்னையில் உள்ள அனைவருக்கும் தெரியும். இது என்ன அபத்தம்” என மேயர் ப்ரியாவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோன்று நெட்டிசன்கள் வெளியிட்டுள்ள பதிவில், “எப்பவுமே பொய் மட்டுமே பேசினால் எப்படி மேடம்? நஷ்டத்தில் இயங்குவாதல் அம்மா உணவகங்களில் உணவளிக்க முடியவில்லை என பேசியதை மறந்துவிட்டீர்களா? திமுகவிற்கு முட்டுக்கொடுக்க இப்படி ஒரு பச்சை பொய்யா?” என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: TN Weather Update: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை

மேயர் ப்ரியாவின் வீடியோ வைரல்

தற்போது வைரலாகி வரும் பழைய வீடியோவில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் முறையாக இயங்குவதில்லை என, மேயர் ப்ரியாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு பதிலளிக்கையில், “அது தவறான கருத்து. வாடிக்கையாளர்கள் குறைவதால் தான் பல இடங்களில் அம்மா உணவகங்கள் பயனில்லாமல் இருக்கின்றன. சில இடங்களில் மாதக்கணக்கில் பூட்டை கூட திறப்பது இல்லை” என மேயர் தெரிவித்துள்ளார்.

Ella seri than aana neenga thaana amma unavagam nastam tharuthu moodanu nu press meet la solli irukinga adhu oru service nu kooda theriyaama pic.twitter.com/JMvMlciUqL

— Anandha (@anandha_raaman) July 19, 2026

அதேநேரம் அருகிலிருந்த துணை மேயர் மகேஷ் குமார் பேசுகையில், “மாநகராட்சி நிர்வாகம் நஷ்டத்தை ஏற்றுக்கொண்டு அம்மா உணவகங்களை இயக்கி வருகிறது. அவற்றை பொதுமக்கள் சரியாக பயன்படுத்துவதில்லை. ஒரு அம்மா உணவகத்தால் மாநகராட்சிக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது” என கூறியுள்ளார். ஆனால், தற்போது வந்த திமுக ஆட்சியால் தான் அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்படுவதாக மேயர் ப்ரியா குறிப்பிட்டுள்ளார்.

Source: Read Full Article