Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்

Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
News Image

தவெகவின் தேர்தல் வாக்குறுதி

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில் தவெகவின் தேர்தல் வாக்குறுதியாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், 6 விலையில்லா சிலிண்டர்கள், மணப்பெண்களுக்கு 1 சவரன் தங்கம் பட்டுச்சேலை, மகளிர் குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் வட்டியில்லா கடன், 200 யூனிட் மின்சாரம் இலவசம், மகளிர் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் அதிரடிப்படை போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக செயல்படுத்த தவெக அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், முதலமைச்சராக பதவியேற்றதும் விஜய் போட்ட முக்கிய கையெழுத்தாக 500 யூனிட்டிற்கு கீழ் பயன்படுத்துபவர்களுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

மகளிர் உரிமை தொகை ரூ.2500

இதனை தொடர்ந்து சிங்கப்பெண் பாதுகாப்பு படை என்ற அறிவிப்பையும் வெளியிட்டு திட்டத்தையும் தொடங்கிவைத்தார். அடுத்தாக பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ஜூன் 22ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளதாக அறிவித்த முதலமைச்சர் விஜய், செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தங்க மோதிரம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், தங்க மோதிரம் வாங்குவதற்கான டெண்டர் வெளியிடப்படுள்ளது. இந்த நிலையில் தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ள அறிவிப்பு மகளிர்களுக்கு மாதம் 2500 ரூபாய் உரிமை தொகையாகும். அந்த வகையில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் மகளிர் உரிமை தொகையாக 1000 ரூபய்  2023ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

பட்ஜெட்டில் வெளியாகுது மகளிர் உரிமை தொகை

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1.31 கோடி மகளிர் பயன் அடைந்து வருகிறார்கள். மகளிர்களின் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் வரவுவைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தவெக அரசின் தேர்தல் வாக்குறுதியான 2500 ரூபாய் வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு முதலமைச்சர் விஜய் வருகிற பட்ஜெட்டில் அறவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தவெக அரசு பதவியேற்ற பிறகு தனது முதல் பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரம் தாக்கல் செய்யவுள்ளது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. புதிய அறிவிப்புகள் தொடர்பாக தினந்தோறும் முதலமைச்சர் விஜய் ஒவ்வொரு துறை அமைச்சர்கள், அதிகாரிகள், நிதி நிலைமை தொடர்பாக ஆலோசித்து வருகிறார். அந்த வகையில் மகளிர் உரிமை தொகை தொடர்பாகவும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் விஜய் பிளான்

தற்போது 1.31 மகளிர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுவதன் மூலம் வருடத்திற்கு சுமார் ரூ.13,720 கோடி முதல் ரூ.13,807 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுவே 2500 கோடி ரூபாய் என உயர்தப்படும் பட்சத்தில் 30 ஆயிரம் கோடியாக ஒரு வருடத்திற்கு ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவே முதலமைச்சர் விஜய், மகளிர்களுக்கு மாதம் 2500 வழங்க வேண்டும் என உறுதியாக உள்ளதால் வருகிற பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல் கூறப்படுகிறது. இதற்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு தொடர்பாக நிதித்துறை அதிகாரிகளோடு முதலமைச்சர் ஆலோசித்துள்ளதாக கூறப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks