கேரள மாநிலத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் ரஞ்சீஸ் தற்கொலை சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் உலுக்கியுள்ளது. இதுதொடர்பாக பலரும் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் குமுளியில் பேருந்து நடத்துநராக ரஞ்சிஷ் என்பவர் பணியாற்றி வந்தார். சமூக வலைத்தளங்கள் பக்கத்தில் ரஞ்சிஷ் பதிவிடும் வீடியோக்களைப் பார்த்தாலே அவர் எவ்வளவு மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை கழித்து வந்திருப்பார் என்பது புரியும். இப்பைட்யான நிலையில் அவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் கடந்த ஜூலை 15ம் தேதி உயிரிழந்தார். இந்த செய்தி கேரள மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

<iframe title="ADMK Leaders Joins TVK | பதவி தர மறுக்கும் தவெக? பின்வாங்கும் அதிமுக தலைகள் நடப்பது என்ன?" src="https://www.youtube.com/embed/TfDvtXt6OVA" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

நடந்தது என்ன?

குமாலி பகுதியில் வசித்து வந்த ரஞ்சிஷ் தனது வயதான பெற்றோரை கவனித்துக் கொண்டே தன் மகனையும் வளர்த்து வந்தார். இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஒரு மகனும் பிறந்த நிலையில் வேலை விஷயமாக ரஞ்சிஷ் மனைவி ஷார்ஜாவுக்கு சென்றிருந்தார். ஆனால் அங்கு சென்ற பிறகு அந்த பெண் வேறொருவருடன் தொடர்பு வைத்துக் கொண்டு ரஞ்சிஷ் மற்றும் மகனை தவிக்க விட்டார். உறவை முறித்துக் கொண்ட நிலையில் தன் ஒரே மகனுக்காக ரஞ்சிஷ் வாழ்ந்து வந்தார்.

Also Read: கடன் சுமை வேண்டாம் !! 10-ம் வகுப்பு மகனுக்காக தம்பதி எடுத்த அதிர்ச்சி முடிவு

கிட்டதட்ட 6 ஆண்டுகள் ஓடியது. இதற்கிடையில் கேரளம் திரும்பிய ரஞ்சிஷின் மனைவி தன் மகனை தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்பி கட்டப்பனா நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனைக் கேட்டு ரஞ்சிஷ் கலங்கி விட்டார். இத்தனை காலம் கஷ்டப்பட்டு வளர்த்த தன் மகனை சட்டம் பிரித்து விட்டதே என மன வலியால் அவதிப்பட்டுள்ளார். இப்படியான நிலையில் தான் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதற்கிடையில் சிகிச்சை பலனின்றி ரஞ்சிஷ் இறந்து விட்டார். ஆனால் அவரின் இறுதிச்சடங்கை செய்யக்கூட மகனை மனைவி அனுமதிக்கவில்லை. தந்தையின் முகத்தைப் பார்க்கவும் தடை போட்டார். எனினும் ரஞ்சிஷ் பெற்றோர் நீதிமன்றத்தை நாடி தன் மகனுக்கு இறுதிச்சடங்கு செய்ய பேரனை அழைத்து வந்தனர். இத்தகைய செய்தியை பெரிதாக காட்டாமல் கேரளத்தின் முக்கிய ஊடகங்கள் மௌனம் காத்தன.

ஆனால் சமூக ஊடகங்களில் இது குறித்த கொந்தளிப்பு எழுந்தபோதுதான் பலரும் இதைக் கவனிக்க தொடங்கினர். இந்த சம்பவம் பற்றிய தகவல் தெரிந்ததும் எங்கு திரும்பினாலும் ரஞ்சிஷூக்கு ஆதரவாக பதிவுகள் வெளியாக தொடங்கியது. ரஞ்சீஷ் பேருந்து நடத்துனராகப் பணியாற்றியபோது எடுக்கப்பட்ட காணொளிகள் வைரலாக தொடங்கியது. அவருடைய மரணம் ஒட்டுமொத்த கேரளத்தையும் உலுக்கி விட்டது. அதேசமயம் சட்டம் மீதான நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்து விட்டதாக பலரும் தெரிவித்துள்ளனர். எத்தனை காலத்திற்கு தான் சட்டம் பெண்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் எனவும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

Source: Read Full Article