JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்

JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
News Image

JanaNayagan H.Vinoth: முதலமைச்சர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் 6 மாத கால தாமதத்திற்குப் பிறகு வரும் ஜுலை 23ம் தேதி வெளியாக உள்ளது.

ஜனநாயகன் திரைப்படம் பிரச்னை என்ன?

முதலமைச்சர் விஜய் தனது முழுநேர அரசியல் பயணத்திற்கு முன்பாக கடைசியாக நடித்த திரைப்படம் ஜனநாயகன். தேர்தலை மையாக கொண்டு வரும் கடந்த பொங்கலன்று திரைப்படம் வெளியாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்படவே, கடந்த 6 மாதங்களாக படத்தை வெளியிட முடியாமல் படக்குழு தவித்து வந்தது. ஒருவழியாக அனைத்து பிரச்னைகளும் முடிந்து வரும் 23ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதுதொடர்பாக இயக்குனர் எச்.வினோத் பல்வேறு நேர்காணல்களை மேற்கொண்டு வருகிறார். அதில் படம் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

திருத்தங்களை சொன்ன தணிக்கை குழு

வழக்கமாக தணிக்கை சான்றிதழ்க்கு 10 நாட்களுக்கு முன்பாக தொடங்க வேண்டிய நடவடிக்கைகளை, நாங்கள் 20 நாட்களுக்கு முன்பாகவே தொடங்கினோம். அப்படி விண்ணப்பித்த உடனேயே தணிக்கை குழு உடனடியாக படத்தை பார்த்தது. அப்போது என்னை அழைத்து பேசிய தணிக்கை குழுவை சேர்ந்த நபர், திரைப்படம் என்ற அடிப்படையில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அதனால் உங்களுக்கு U/A சான்றிதழ் அளிக்கிறோம். வன்முறை காட்சிகளை நீக்கினால் U/A 16+ சான்றிதழை வழங்குகிறோம் என கூறினார். நாங்களும் அதற்கு சம்மதித்தோம்.

அவர்கள் நீக்க சொன்ன காட்சிகளை ஏற்றுக்கொண்டு அவற்றை நீக்குவதற்கான பணிகளை மேற்கொண்டோம். சிஜிஐ தொடர்பான பணிகள் எல்லாம் இருந்ததால் ஒரு நாள் அவகாசம் தேவைப்பட்டது. அதெயெல்லாம் செய்து முடித்து கொண்டு போய் காட்டும்போது, இன்னும் சில காட்சிகளை நீக்க வேண்டும் என கூறினார். அதையும் செய்த பிறகு, அதை விண்ணப்பிப்பதற்கான இணையதளத்தை அணுக முடியவில்லை. இதுதொடர்பாக தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டும், மெயில் மூலமும் தகவலை தெரிவித்தோம். இதன் பிறகு தலைமை அலுவலகத்தையும் தொடர்புகொண்டோம்.

பதிலே வரவில்லை - எச். வினோத்

ஆனால், சில நாட்களுக்குப் பிறகு படம் தொடர்பாக புகார் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதனால் படத்தை நிறுத்திவைக்கிறோம் என்பதால் தான் விண்ணப்பிப்பதற்கான இணையதளத்தை உங்களால் அணுக முடியவில்லை என்றனர்.  ஒருபக்கம் லட்சக்கணக்கில் செலவு செய்து திரையரங்குகளில் படத்தை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். முன்பதிவு தொடங்கிவிட்டது. விநியோகஸ்தர்கள் கோடிக்கணக்கில் செலவுகளை செய்துள்ளனர்.மிகப்பெரிய அமைப்பு படத்தை சுற்று இயங்கிக் கொண்டிருந்த நிலையில், ரசிகர்களுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. வெளியீட்டு தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் வேலையில், இரண்டு படங்களுக்கும் சென்சார் கிடைப்பதில் சிக்கல் நீடித்தது. பராசக்திக்கு கிடைத்தவிட்ட நிலையில், ஜனநாயகனுக்கு சென்சார் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற பதிலே கிடைக்கவில்லை.

இதையும் படியுங்கள்:TN Weather Update: தமிழத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை

”சென்சார் குழு பிரச்னை இல்லை”

மறுப்பும் சொல்லாமல், பதிலும் சொல்லாமல் இருக்கவே இதில் வேறு ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது என்று நினைத்தே தயாரிப்பு தரப்பு நீதிமன்றத்தை நாடியது. வழக்குப்பதிவு செய்த பிறகு தான் எங்களுக்கான பதிலே கிடைத்தது. படத்தை மறுதணிக்கை செய்கிறோம் என கூறினார்கள். ஆனால், ஏற்கனவே வழக்கு தொடர்ந்து இருந்ததால் வழக்கமான நடைமுறைகளில் படம் சிக்கிக் கொண்டது.  யூகங்களாக பல விஷயங்கள் உள்ளன. ஏன் நடக்கிறது? யாரால் நடக்கிறது? என யோசிக்கும்போது, விஜய்  கட்சி தலைவராக இருக்கிறார். எனவே அவருக்கு கீழே இருக்கும் நபரால் பிரச்னை வரப்போவதில்லை. அவரை விட மேலே இருப்பவர்களால் தான் பிரச்னை வரப்போகிறது. அந்த பெயர்களை எல்லாம் நம்மால் உச்சரிக்க கூட முடியாது. காரணம் சரியான ஆதாரங்கள் இல்லாமல் எதையும் சொல்ல முடியாது. சட்டத்திற்கு என ஒரு அதிகாரம் உண்டு. அதை கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். என்னை பொறுத்தவரை ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை குழு பிரச்னை இல்லை” என ஜனநாயகன் திரைப்படத்தின் இயக்குனர் எச். வினோத் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks