Jana Nayagan: ஜனநாயகன் பார்த்து அழுத அமைச்சர்கள்.. குற்றால அருவி தோத்துடும்.. ஆர்.பி.உதயகுமார் கிண்டல்!

Jana Nayagan: ஜனநாயகன் பார்த்து அழுத அமைச்சர்கள்.. குற்றால அருவி தோத்துடும்.. ஆர்.பி.உதயகுமார் கிண்டல்!
News Image

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் பார்த்து தமிழக அமைச்சர்கள் அழுத சம்பவத்தை சுட்டிக்காட்டி முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் விஜய் நடித்து ஜனநாயகன் படம் நேற்று வெளியாகி வசூலை வாரி குவித்து வருகிறது. அவரது சினிமா கேரியரின் கடைசிப்படமான இந்த படத்தைக் காண முதல் நாளே பலரும் தியேட்டரில் குவிந்தனர். ஜனநாயகன் படத்தின் விஜயின் சினிமா வாழ்க்கையை சிறப்பிக்கும் வகையில் கடைசியில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. அதில் விஜய் நடித்த அத்தனை படங்களின் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இதனைப் பார்த்த பலரும் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர். இதில் தமிழ்நாட்டின் தற்போதைய அமைச்சர்களும் சிலரும் உண்டு.

அமைச்சர்கள் அழுதது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறிய நிலையில் இதனை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக சாடியுள்ளார்.

இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “நம்ம முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் நேற்று வெளியானது. இதனால் தமிழ்நாட்டில் நாம் நினைத்தது போல அறிவிக்கப்படாத அரசு விடுமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகமே திருவிழா கோலமாக இருக்க வேண்டும் என அமைச்சர் ஆனந்த் உத்தரவிட்டிருந்தார். ஆனால் விஜய் ரசிகர்கள் தமிழ்நாட்டை அலங்கோலப்படுத்தியிருந்தார்கள். வார நாட்களில் தவறாமல் தலைமைச்செயலகம் வரும் விஜய் நேற்று வரவில்லை. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே அமைச்சர்களும், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்களும் மக்கள் பணியை தள்ளி வைத்து விட்டு முதல்வர் ஜோசப் விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கு ரீல்ஸ் போட தியேட்டருக்கு போய் விட்டார்கள்.

Also Read: Jana Nayagan: ஜனநாயகன் படம் பார்த்தால் சமூக விரோதிகளா? .. கொந்தளித்த நடிகை சனம் ஷெட்டி!

அதுதான் தவெக அரசின் தலையாய பணியாக நேற்று தமிழ்நாடு கண்டுகளித்தது. ரீல்ஸ் போட தியேட்டருக்கு ஜனநாயக காவலர்கள் போன நிலையில் அங்கு குற்றால அருவியாக தண்ணீர் கொட்டியது. என்னவென்று திரும்பி பார்த்தால் தமிழ்நாடு அமைச்சர்கள் கண்ணீர் விட்டு அழுதது நம் நெஞ்சத்தை பதற வைத்து விட்டது.

இந்தாண்டு காவிரியில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடவில்லை என்பதால் வந்த கண்ணீரோ, தமிழ்நாட்டிற்கு கர்நாடகா தண்ணீர் தர மறுக்கிறதே அதனால் வந்ததோ, சாமானிய மாணவர்களை பாதிக்கக்கூடிய நீட் தேர்வை ரத்து செய்ய முடியாமல் போனதே அதனால் வந்ததோ, கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதை எப்படி தடுப்பது என நினைத்து வந்ததா, அரசு மருத்துவமனையில் நோயாளியின் கால் விரலை எலி கடித்ததால் வந்த கண்ணீரோ, பெண்கள் பாதுகாப்பு, போதை தடுப்பு நடவடிக்கை உறுதிப்படுத்த முடியவில்லையே என்ற கண்ணீரா என தெரியவில்லை.

இத்தனையும் பார்த்து விட்டு கண்ணீர் வராத நம் தமிழக அமைச்சர்களுக்கு ஜனநாயகன் படம் பார்த்தபோது வந்த கண்ணீருக்கு குற்றால அருவியே போட்டிப்போட முடியவில்லை என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks