வருமான வரி தாக்கல் செய்தீர்களா? ஈ-வெரிஃபிகேஷன் செய்யாவிட்டால் ITR செல்லாது!

வருமான வரி தாக்கல் செய்தீர்களா? ஈ-வெரிஃபிகேஷன் செய்யாவிட்டால் ITR செல்லாது!
News Image

கடைசி தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்வது எவ்வளவு முக்கியமோ? அதே அளவுக்கு முக்கியம் ஈ-வெரிஃபிகேஷன் செய்வது. ஆனால் பலர் இந்த ஒரு விஷயத்தை மட்டும் கவனிப்பதே இல்லை. இந்த செயல்முறையை நீங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் நீங்கள் தாக்கல் செய்த ITR செல்லாததாகக் கருதப்படும். அதாவது நீங்கள் வருமான வரி தாக்கல் செய்திருந்தாலும் அவற்றை வருமானவரித்துறை ஏற்றுக்கொள்ளாது.

நீங்கள் ITR படிவத்தை சமர்ப்பித்த பிறகு அதை சரி பார்க்க வேண்டும். உண்மையிலேயே வரி செலுத்தும் நபர் தான் ITR தாக்கல் செய்திருக்கிறாரா? அவர் வழங்கிய விவரங்கள் அனைத்தும் உண்மையானது தானா என்பதை உறுதிப்படுத்துவதற்காக தான் இந்த செயல்முறை. அப்போதுதான் வருமானவரித்துறை உங்களுடைய ITR-ஐ ஏற்றுக்கொள்ளும். இல்லை என்றால் நீங்கள் மீண்டும் முதலிலிருந்து தொடங்கி ITR தாக்கல் செய்ய வேண்டி வரும். ஈ-வெரிஃபிகேஷன் செயல்முறை முடிந்த பிறகு தான் வருமானவரித்துறை அடுத்த செயல்முறையை தொடங்கும். உதாரணமாக வரி செலுத்துபவர் ரீஃபண்ட் பெற தகுதியுடையவர் என்றால் ஈ-வெரிஃபிகேஷன் முடிந்த பிறகே உங்களுக்கு வரவேண்டிய ரீஃபண்ட் தொகை அக்கவுண்டுக்கு வரும். தற்போது அனைத்து செயல்முறைகளையும் வருமானவரித்துறை வேகமாக்கியுள்ளது.

கடந்த முறை 90 நாட்கள் வரை ரீஃபண்ட் தொகை வழங்குவதற்கு நேரம் ஆனது. ஆனால் இந்த முறை வெறும் 1 நாளில் ரீஃபண்ட் தொகையை பெற்று வருவதாக சிலர் தெரிவித்துள்ளனர். எனவே இதற்கும் இந்த ஈ-வெரிஃபிகேஷன் மிக மிக முக்கியம். இணையதளம் மூலமாகவே ஆன்லைனில் இதைச் செய்யலாம். இதற்கு முன்னர் ஐடிஆர் V படிவத்தை பெங்களூரில் இருக்கும் சிபிசி மையத்திற்கு போஸ்ட் மூலம் அனுப்ப வேண்டி இருந்தது. ஆனால் இப்போது ஆன்லைன் மூலமாகவே செய்து முடிக்கலாம். ஈ-வெரிஃபிகேஷன் செயல்முறைக்கு நீங்கள் பான் கார்டு, ஆதார் கார்டு மற்றும் பேங்க் அக்கவுண்ட் விவரங்களை வைத்திருக்க வேண்டும். கண்டிப்பாக பான் கார்டு, ஆதார் கார்டும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதேபோல உங்களுடைய வங்கி கணக்கை சரிபார்த்து வைத்திருக்க வேண்டும். ஆதாரில் கண்டிப்பாக நீங்கள் பதிவு செய்த மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதோடு வருமான வரி தாக்கல் செய்தவர்கள் கையில் அக்னாலேஜ்மென்ட் நம்பரை வைத்திருக்க வேண்டும்.இதை பல வழிகளில் செய்யலாம். ஆதார் ஒடிபி, நெட் பேங்கிங், எலக்ட்ரானிக் வெரிஃபிகேஷன் கோட், டிஜிட்டல் சிக்னேச்சர் சர்டிபிகேட் மற்றும் ஏடிஎம் போன்ற பல வழிகளைப் பயன்படுத்தி சரிபார்ப்பு செயல்முறையை முடிக்கலாம்.

வரி செலுத்துபவர்கள், நெட் பேங்கிங் பயன்படுத்திக் கொண்டிருந்தால். அவர்கள் அதன் மூலமாகவே வருமானவரித்துறையின் ஈ-ஃபைலிங் போர்ட்டலை பயன்படுத்தலாம். அதுவே எலக்ட்ரானிக் வெரிஃபிகேஷன் கோட் மூலம் சரிபார்க்க உங்களுடைய வங்கி கணக்கு மூலம் ஈவிசி கோடை ஜெனரேட் செய்து அதை போர்ட்டலில் வழங்கலாம். இதை சிரமமாக நினைப்பவர்கள் உங்களுடைய வங்கி ஏடிஎம்ம்கள் மூலமாக எலக்ட்ரானிக் வெரிஃபிகேஷன் கோடை ஜெனரேட் செய்து, அதை போர்ட்டலில் வழங்க வேண்டும். இந்த கோடு நேரடியாக உங்கள் மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும். இமெயில் முகவரிக்கும் அனுப்பப்படும். எனவே ஐடிஆர் தாக்கல் செய்தவர்கள் முதல் படியை மட்டும் தான் முடித்திருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதன் பிறகு வருமானவரித்துறை நிர்ணயித்த காலகெடுவுக்குள் வெரிஃபிகேஷன் செயல்முறையையும் முடிக்க வேண்டும். இதை ஓரிரு நிமிடங்களில் எளிதில் முடிக்கலாம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks