ISRO Scientist Resignation: இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையில் நிகழும் தொடர் ராஜினாமாக்களை தடுக்க, புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதாம்.

இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா..!

இஸ்ரோ நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சி பணிகளை தீவிரப்படுத்த பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளது. ஆனால், அண்மைக்காலமாக இந்த பிரிவில் பணியாற்றி வரும் ஆராய்ச்சியாளர்களின் ராஜினாமாக்கள் அதிரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், ககன்யான் மற்றும் பிற குறிப்பிட்ட திட்டங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகள் விருப்ப ஓய்வு மற்றும் ராஜினாமா செய்வதற்கான விதிகளை கடுமையாக்கி விண்வெளி துறையானது அண்மையில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இஸ்ரோவில் பணியாற்றி வந்த எத்தனை ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா செய்தனர் என்ற சரியான எண்ணிக்கையை, விண்வெளித்துறை இதுவரை வெளியிடவில்லை. ஆனால், இந்த எண்ணிக்கை 100 முதல் 120 வரை இருக்குமென கூறப்படுகிறது.

100+ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா..!

வெளியாகியுள்ள தகவல்களின்படி, பெங்களூருவில் உள்ள யு.ஆர். ராவ் செயற்கைகோள் மையத்தில் (URSC) இருந்து மட்டுமே 80 பேரும், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (VSSC) இருந்து 20 பேரும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வேலையை விடுவது தொடர்பாக பரிசீலிக்கும் எண்ணிக்கையில் பலர் இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், VSSC-யைச் சேர்ந்த LVM-3 திட்ட இயக்குநர் விக்டர் ஜோசப் போன்ற முக்கியப் பணியாளர்கள் விலகியுள்ளனராம். URSC-யிலிருந்து SpaDeX திட்ட இயக்குநர் வெளியேறியுள்ளாராம். சந்திரயான்-3 திட்டத்தில் அங்கம் வகித்த மிகவும் திறமையான இளைஞர் ஒருவரும் விலகியுள்ளார் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. இதற்கான காரணங்கள் ஏதும் வெளியாகவில்லை.

வேலை பளு காரணமா?

இஸ்ரோவில் பணியாற்றி வரும் 14 ஆயிரத்து 600-க்கும் அதிகமான எண்ணிக்கையில், நூறு பேரின் ராஜினாமா என்பது மிகவும் சொற்பமே. ஆனால், அவை அனைத்துமே மிகவும் முக்கியமான பிரிவுகளில் இருந்து வந்துள்ளதே குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டின் இறுதியில், URSC-யில் 1,339 பணியாளர்களும், இஸ்ரோவின் மிகப்பெரிய மையமான VSSC-யில் 4.577 பணியாளர்களும் இருந்தனர். இந்நிலையில் நிகழ்ந்து வரும் ராஜினாமாக்கள் முக்கியப் பணிகளில் இருந்து பணியாளர்களை இழக்க நேரிடுமோ என்பதே கவலையாக இருந்து வருகிறது. பணிச்சுமை மற்றும் தனியார் விண்வெளித்துறையில் உள்ள வாய்ப்புகள் காரணமாகவே இவர்கள் ராஜினாமா செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: CM Vijay: லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?

ராஜினாமாவிற்கு கட்டுப்பாடுகள்..!

இந்நிலையில் வெளியாகியுள்ள சுற்றறிக்கையில், “ககன்யான் மற்றும் பிற முக்கிய திட்டங்களுடன் தொடர்புடைய விஞ்ஞானிகளின் ராஜினாமா மற்றும் விருப்ப ஓய்வு கோரிக்கைகள் வழக்கத்தை போன்று ஏற்றுக்கொள்ளப்படாமல் போகலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொறுப்பேற்றுள்ள திட்டங்கள் நிறைவடையும் வரை ஆராய்ச்சியாளர்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டாம் என மைய இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற அனைத்து கோரிக்கைகளும் இறுதி முடிவுக்காக இயக்குநரின் பரிந்துரைகளுடன் விண்வெளித்துறைக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, 2020-ல் செய்யப்பட்ட ஒரு முக்கிய நிர்வாக மாற்றத்தை ரத்து செய்கிறது.

முன்னதாக கடந்த 2020ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆணையின்படி, விஞ்ஞானி/பொறியாளர்-SG நிலை வரையிலான 'குரூப் ஏ' அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களிடமிருந்து விருப்ப ஓய்வு மற்றும் ராஜினாமா கோரிக்கைகளை ஏற்க இஸ்ரோ மைய இயக்குனர்கள் மற்றும் பிரிவுத் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், ககன்யான் மற்றும் பிற முக்கிய திட்டங்களுடன் இணைக்கப்பட்ட விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்ட அந்த அதிகாரம் தற்போது திறம்பட திரும்பப் பெறப்பட்டுள்ளது. தேசியப் பணிகளில் பணியாற்றும் அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகளுக்குப் பதிலாக புதியவர்களை நியமிப்பது, காலி இடங்களை நிரப்புவது போல எளிதான காரியம் அல்ல என்பதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.

Source: Read Full Article