Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்

Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
News Image

உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரான் அடைந்த துயரத்தை அமெரிக்கா புரிந்துகொள்ளத் தவறிவிட்டது என்று குற்றம் சாட்டி, டொனால்ட் ட்ரம்பின் தொடர்ச்சியான கருத்துக்களுக்கு ஈரான் கடும் பதிலடி கொடுத்துள்ளது. கமேனியின் இறுதிச் சடங்கிற்காக மூத்த ஈரானிய தலைவர்கள் கூடியிருந்தபோது, ​​ஒரே தாக்குதலில் பலரை தன்னால் ஒழித்திருக்க முடியும் என்று ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து, இந்த எதிர்வினை வந்துள்ளது. மக்களை கொல்ல முடியும், ஆனால் அவர்களின் கருத்துக்களை அழிக்க முடியாது என்று கூறிய டெஹ்ரான், ட்ரம்ப்பின் கருத்துக்களை வன்மையாக கண்டித்ததுடன், அமெரிக்காவிடம் நாகரிகம், வரலாறு மற்றும் மரியாதை இல்லை என்றும் குற்றம் சாட்டியது.

ட்ரம்ப்பை கண்டித்த ஈரான்

ட்ரம்பின் கருத்துக்களுக்கு ஆர்மீனியாவில் உள்ள ஈரானிய தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவின் மூலம் பதிலளித்துள்ளது. அதில், அமெரிக்கா தனது 250 ஆண்டுகால இருப்பை கொண்டாடி வந்தபோதிலும், ஈரானின் துக்கத்தை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என்று கூறியுள்ளது.

அமெரிக்காவிற்கு “நாகரிகமும் இல்லை, வரலாறும் இல்லை, மரியாதையும் இல்லை” என்று கூறிய தூதரகம், ஈரான் அதன் தலைவர்கள் மற்றும் கொள்கைகளுடன் கொண்டுள்ள உணர்வுப்பூர்வமான பிணைப்பை வாஷிங்டனால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டது.

கமேனியின் இறுதிச் சடங்கு பிரார்த்தனைகளுக்குப் பிறகு இந்த எதிர்வினை வந்துள்ளது. இறுதிச் சடங்கல் அவரது மூன்று மகன்களும் பல மூத்த ஈரானிய அதிகாரிகளும் பகிரங்கமாக பங்கேற்றனர். ஈரானின் தற்போதைய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியும் தனது தந்தைக்கு அஞ்சலி செலுத்த அந்த விழாவில் கலந்து கொண்டார்.

'கொள்கைகளை அழிக்க முடியாது'

ட்ரம்ப் மீதான தனது தாக்குதலைத் தொடர்ந்த ஈரான், தனிநபர்கள் கொல்லப்படலாம், ஆனால் அவர்களின் நம்பிக்கைகளும், கொள்கைகளும் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளது.

“நீங்கள் அயதுல்லா கமேனியைக் கொன்றீர்கள், ஆனால் உண்மையில், நீங்கள் ஒரு வாசனைத் திரவிய புட்டியை மட்டுமே உடைத்தீர்கள். அதன் நறுமணம் எங்கும் பரவியுள்ளது,” என்று அந்த ஈரானிய அறிக்கை கூறியதுடன், அமெரிக்காவால் இத்தகைய உணர்வுகளை புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டது.

ட்ரம்ப் கூறியது என்ன.?

சமீபத்திய நாட்களில் ஈரான் தொடர்பாக ட்ரம்ப் பல கடுமையான அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். மோதலின் போது, டெஹ்ரான் கடுமையாக பலவீனமடைந்தது என்பதும் அதில் அடங்கும்.

பல ஈரானியத் தலைவர்களை ஒரே நேரத்தில் குறிவைக்கும் திறன் தன்னிடம் இருந்தும், அவ்வாறு செய்ய அவர் விரும்பவில்லை என்றும் அமெரிக்க அதிபர் கூறினார். மேலும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பு, ஈரான் துக்கம் அனுசரிக்க அவகாசம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கமேனியின் மரணம் மற்றும் அவருக்குப் பின் வருபவர் குறித்த அரசியல் நிகழ்வுகளைத் தொடர்ந்து, பதற்றம் நிலவி வரும் நிலையில், டெஹ்ரானின் சமீபத்திய பதில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான வார்த்தைப் போரில் மற்றுமொரு தீவிரமான நிலையை குறிக்கிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks