IND Vs ENG ODI: தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI

IND Vs ENG ODI: தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
News Image

IND Vs ENG ODI Rohit Kohli: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் ராகுல் ட்ராவிட்டின் நீண்ட நாள் சாதனையை முறியடிக்கு வாய்ப்பை கோலி மற்றும் ரோகித் பெற்றுள்ளனர்.

இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் தொடர்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-0 என இழந்தது. இதன் மூலம் சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி டி20 தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை இழந்தது. அதோடு, சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 தொடரை இழந்தது. இந்நிலையி தான் இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடங்குகிறது. இதில் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்குவதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பர்மிங்ஹாமில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இந்த போட்டி நடைபெற உள்ளது.

பழிவாங்குமா இந்திய அணி?

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஷார்ட் பால்களை எதிர்கொள்ள முடியாமல் இந்திய வீரர்கள் தடுமாறினர். ஆனால், அத்தகைய பந்துகளை சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளாக மாற்றுவதில் ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோர் கைதேர்ந்தவர்கள் ஆவர். அதோடு, ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் ஆதிக்கம் செலுத்தியதற்கும், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்தியாவிற்கு எதிரான தொடர் வெற்றிக்காக இங்கிலாந்து காத்துக்கிடந்ததற்கும் ரோகித் மற்றும் கோலி ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். இந்நிலையில், டி20 தொடரில் கண்ட மிக மோசமான தோல்விக்காக, இருவரும் சேர்ந்து இங்கிலாந்தை பழிவாங்குவார்களா என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

ட்ராவிட் சாதனையை முறியடிப்பார்களா?

இதனிடையே, இந்த தொடரின் மூலம் ஒரு முக்கியமான சாதனையை முறியடிக்கும் வாய்ப்பும் இந்தியாவின் முன்னாள் கேப்டன்களுக்கு கிடைத்துள்ளது. இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர்கள் என்ற சாதனையை படைக்கும் கடைசி வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் 20 போட்டிகளில் விளையாடி 648 ரன்கள் சேர்த்த முன்னாள் கேப்டன் ராகுல் ட்ராவிட் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். தற்போது சர்வதேச போட்டிகளில் விளையாடும் இந்திய வீரர்களில் 581 ரன்களுடன் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக 10 போட்டிகளில் 410 ரன்களுடன் ரோகித் சர்மா ஏழாவது இடத்தில் உள்ளார். அதன்படி ட்ராவிட்டின் சாதனையை முறியடிக்க கோலிக்கு 68 ரன்களும், சச்சினுக்கு 239 ரன்களும் தேவை. அதேநேரம், இந்த பட்டியலில்  தோனி 613 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்

கோலியின் சாதனைகள்

இங்கிலாந்து மண்ணில் கோலி இதுவரை 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவற்றில் 4 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் உட்பட 581 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 107 ரன்களை சேர்த்துள்ளார்.

ரோகித் சர்மாவின் சாதனைகள்

இங்கிலாந்து மண்ணில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா, 2 சதங்கள் மற்றும் 2 அரைசதங்கள் உட்பட 410 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 137 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இந்த பட்டியலில் முதல் 7 இடங்களை பிடித்துள்ள இந்தியர்களில் மிகக் குறைவான போட்டிகளில் பங்கேற்றவராகவும், அதேநேரம் உச்சபட்சமாக 58.57 என்ற சராசரியை கொண்டவராகவும் ரோகித் சர்மா விளங்குகிறார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks