திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?

திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
News Image

திமுக, அதிமுக இணைந்து கூட்டணி அமைக்க முயற்சி செய்தது உண்மை தான், இந்த விஷயத்தில் எங்களிடம் கருத்து கேட்கப்படவில்லை என முன்னாள் தாராபுரம் எம்.எல்.ஏ., சத்யபாமா தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றாலும் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஒருவார கால தாமதத்தோடு ஆட்சியமைத்தது. இதற்கிடையில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்த பரம எதிரிகளான திமுக, அதிமுக இணைந்து ஆட்சியமைக்க முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.  அதில் தாராபுரம் எம்.எல்.ஏ., சத்யபாமாவும் ஒருவர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் இன்று பனையூர் அலுவலகத்தில் கட்சியில் இணைந்த மாற்றுக் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை சந்தித்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த EX MLA சத்யபாமா, “தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் வரவழைத்து தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை. மரியாதை நிமித்தமான சந்திப்பாகவே இருந்தது. மக்களுடன் இணைந்து பணியாற்ற எங்களுடைய ஒத்துழைப்பு இருக்கும் என விஜய் தெரிவித்தார். இடைத்தேர்தலில் நாங்கள் வாய்ப்பு கேட்போம். முடிவு என்னவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வோம். நாங்கள் முழு திருப்தியோடு தான் இயங்கி வருகிறோம்.

பிற கட்சிகளை விட அதிமுகவில் இருந்து தான் அதிகளவில் தவெகவுக்கு வருகை தருகிறார்கள். அதற்கு காரணம் அதிமுகவில் தலைமை சரியில்லை, உட்கட்சி பூசல் நடக்கிறது. அனைவரையும் தலைமை அனுசரித்து நடக்கவில்லை என்பது தான் இதிலிருந்து தெரிய வருகிறது. என்னுடைய தாராபுரம் மக்களுக்கு நான் நிலைமையை புரிய வைத்து இடைத்தேர்தலை சந்திப்பேன்.

தவெகவுடன் அதிமுக கூட்டணி வைக்கும் என்பது அனைவரின் விருப்பமாகவும் இருந்தது. அது இல்லை என்ற நிலையில் மக்களுக்கு அதிருப்தி நிலவியது. ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுக பெரிய வெற்றியைப் பார்க்கவில்லை. அந்த சூழலில் தவெகவுடன் இணைந்து செயல்பட்டிருக்கலாம் என்பது அனைவரின் எண்ணமாக இருந்தது. அந்த கூட்டணி அமையாமல் போனதற்கு அதிமுக தலைமையை தான் கேட்க வேண்டும்.

Also Read: Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு

எங்களையெல்லாம் எந்த கருத்தும் கேட்கவில்லை. 4 மீட்டிங் நடந்தது. ஒரு எம்.எல்.ஏ.வாக கூட எங்கள் கருத்தை சொல்ல முடியவில்லை. புதுச்சேரி ரிசார்ட்டுக்கு வந்து எங்களை சந்தித்து திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்கப் போகிறேன் என்று தான் எடப்பாடி பழனிசாமி சொன்னார். மத்தபடி தனிப்பட்ட முறையில் என்ன பேசினார்கள் என்பது தெரியாது. இபிஎஸ் அப்படி சொல்லும்போது ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் திமுகவால் நாங்கள் கஷ்டப்பட்டிருக்கிறோம். நிறைய இடையூறுகளை நான் ஊராட்சி தலைவராக இருந்தபோது சந்தித்துள்ளேன். இது தவறான தகவல் கிடையாது. உண்மையாகவே திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. இதனை எடப்பாடி பழனிசாமி தான் சொன்னார். அப்படி ஒரு வார்த்தை சொல்லாமல் இருந்திருந்தால் இந்த மாதிரி தவெகவுக்கு நாங்கள் வந்திருக்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks