ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு புதிதாக ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அந்த திட்டத்தின் பெயர் அம்னெஸ்டி திட்டம் 2026 (Amnesty Scheme). இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால் இது ஒரு முறைப்படுத்தும் திட்டம் அவ்வளவுதான். தமிழில் பொது மன்னிப்பு திட்டம் அல்லது பொது சமரசம் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. 1961 வருமானவரிச் சட்டத்தின் கீழ் ஒரு சில நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பிஎஃப் தொகையை தாங்களே நிர்வகித்து வரும்.

இதற்கு EPFO அமைப்பு மற்றும் வருமானவரித்துறை ஆகிய இரண்டிலும் அனுமதி பெற வேண்டும். ஆனால் சில நிறுவனங்கள் அனுமதி எதுவும் பெறாமல் PF தொகையை நிர்வகித்து வருகின்றன. இதை முறைப்படுத்துவதற்காக தான் அரசு அம்னெஸ்டி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

எந்தெந்த நிறுவனங்கள் அனுமதி பெறாமல் பிஎப் தொகையை நிர்வகித்து வருகிறதோ அந்த நிறுவனங்கள் தங்கள் தவறுகளை சரி செய்து கொள்ள இது ஒரு வாய்ப்பு. அதற்கான கால அவகாசத்தையும் EPFO அமைப்பு வழங்கியுள்ளது. அடுத்து வரும் 6 மாத காலங்களுக்குள் நிறுவனங்கள் தங்களுடைய பிழைகளை சரி செய்து கொள்ளலாம். அது மட்டுமின்றி இந்த திட்டத்திற்கென்று சிறப்பான சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் இயங்கும் நிறுவனங்கள் 6 மாத காலத்திற்குள் சரி செய்து கொண்டால் வழக்கமாக விதிக்கப்படும் அபராதம் அல்லது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு யார் தகுதியானவர்கள்? எப்படி விண்ணப்பிப்பது? என்றால், வருமான வரி சட்டம் 1961 கீழ் மத்திய அரசு மற்றும் மாநில அரசிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் பிஎப் தொகையை நிர்வகித்து வரும் நிறுவனங்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். நிறுவனங்கள் இந்த திட்டத்தில் இணைய விருப்பமிருந்தால் நேரடியாக EPFO அலுவலகத்திற்குச் சென்று கடிதம் எழுதி கொடுக்கலாம்.

நிறுவனத்தின் உரிமையாளர்கள் இந்த திட்டத்தில் இணைய
[email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் கடிதம் அனுப்பலாம். ஆனால் அதற்கு முன்னர் உங்களுடைய கணக்கு வழக்குகளை ஒரு சார்ட்டட் அக்கவுண்டன்டை வைத்து முறையாக ஆடிட் செய்து அனுப்ப வேண்டும்.

இதுவரை எந்த அனுமதியும் இன்றி முறையாக செயல்படாத நிறுவனங்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள இது ஒரு அரிய வாய்ப்பாகும். மேலும் அபராதம் எதுவும் விதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வரும் காலத்தில் வருமானவரித்துறையிடம் இருந்து சிக்கல்கள் வராமல் இருக்க நிறுவனங்கள் முறையாக தங்களை இணைத்துக் கொள்ளலாம்.

Source: Read Full Article