Domestic Violence:  27 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் மாமனார், மாமியார் கைது செய்யப்பட்ட நிலையில், மனைவி தலைமறைவாகியுள்ளார்.
27 வயது இளைஞர் தற்கொலை
அண்மைக்காலமாக குடும்ப வன்முறைகள் காரணமாக ஆண்களும் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. அந்த வரிசையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. நாசிக் நகரில் தனது மனைவி மற்றும் மாமியார் வீட்டார் தன்னை மனரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி, 27 வயதான இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இறந்தவர் அனிகேத் பாலாசாஹேப் ஜக்தாப் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மரண்அம் தொடர்பாக மனைவி, அவரது பெற்றோர் மற்றும் தாய்வழி அத்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு என்ன?
அனிகேத்தின் மரணம் ஆரம்பத்தில் விபத்து மரணமாகப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், அவரது தந்தை பாலசாஹேப் ஜக்தாப் அளித்த புகாரின் அடிப்படையில், கேம்ப் போலீசார் பஞ்சஷீல் நகரைச் சேர்ந்த அனிகேத்தின் மனைவி ஸ்ருதி ஜக்தாப், அவரது தாய் வந்தனா சுபாஷ் திவ்ரே, தந்தை சுபாஷ் சுக்தேவ் திவ்ரே மற்றும் தாய்வழி அத்தை உஜ்வலா சதீஷ் பவார் ஆகிய அனைவரும் சேர்ந்து, அவரை மனரீதியாகத் துன்புறுத்தி இந்த விபரீத முடிவை எடுக்கத் தூண்டியதாகக் குற்றம் சாட்டி வழக்குப் பதிவு செய்தனர். ஸ்ருதியின் பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர், ஆனால் ஸ்ருதியும் அவரது தாய்வழி அத்தையும் தலைமறைவாகி உள்ளனர். அவர்கள் இருவரையும் உடனடியாகக் கைது செய்யாவிட்டால், தீக்குளித்துத் தற்கொலை செய்துகொள்வோம் என அனிகேத்தின் குடும்பத்தினர் எச்சரித்துள்ளனர்.
ஒரே வருடத்தில் நேர்ந்த விபரீதம்:
புகாரின்படி, அனிகேத் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு பஞ்சஷீல் நகரைச் சேர்ந்த ஸ்ருதி திவ்ரே என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணமானதிலிருந்து தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். ஸ்ருதி, அனிகேத்துடன் சேர்ந்து வாழ மறுத்ததோடு, அவர் மீது காவல் நிலையத்திலும் புகார் அளித்ததால், கடந்த பல மாதங்களாக அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியான துன்புறுத்தல்களைத் தாங்க முடியாமல், அனிகேத் தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
இதையும் படியுங்கள்: ஊரக வேலைவாய்ப்பு திட்டம்..! இனி 125 நாட்கள், அதிகபட்சமாக ரூ.450 சம்பளம் - தமிழகத்திற்கு எவ்வளவு?
Source: Read Full Article