DMK vs CM Vijay : வெறும் வாயில் வடை சுடாதீங்க, ரீல்ஸ் மூலம் ஆய்வு செய்யாதீங்க - விஜய் அரசை வெளுத்தெடுத்த திமுக

DMK vs CM Vijay : வெறும் வாயில் வடை சுடாதீங்க, ரீல்ஸ் மூலம் ஆய்வு செய்யாதீங்க -  விஜய் அரசை வெளுத்தெடுத்த திமுக
News Image

தமிழகத்தில் பெண்கள் பாதுக்காப்பு

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறது. அந்த வகையில் திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், முதலமைச்சர் விஜயின் இந்த துர்நாற்ற சக்தி ஆட்சி இருமாதங்களை கடப்பதற்குள்ளே சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, பெண்களுக்கு பாதுகாப்பு என கட்டிய பொய்கோட்டைகள் அனைத்தும் பொல பொலவென உதிர்ந்து வருகிறது.

நாட்டில் நாளுக்கு நாள் பெண்களின் பாதுகாப்பும், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.. இதன் உச்சமாக இன்று கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவி, விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு கோவை: சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது..

பெண்களுக்கு எதிரான குற்றம்

17.06.2026 அன்று கோவையில் கை, கால்கள் கட்டப்பட்டு உடலில் காயங்களுடன் 25 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக மீட்கப்பட்டார்.

28.06.2026 அன்று ராமநாதபுரம் பசும்பொன் நகரில் காணாமல் போன 5 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

03.07.2026 அன்று தஞ்சாவூர் பூதலூர் அருகே காணாமல் போன 17 வயது சிறுமி, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

துர்நாற்றம் வீசும் வார்த்தை

இந்த துயர சம்பவங்கள் ஒருபுறம் எனில், 60 வயது மூதாட்டி முதல் ஆறு வயது சிறுமி வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் - இந்த கொடுமையை எல்லாம் எங்கே சொல்ல? வாய்கிழிய வசனம் பேசும் சேடிச முதலமைச்சர் விஜய், வெறும் வாயில் வடை சுடாமல், ரீல்ஸ் மூலம் பேருக்கு சிங்கப்பெண் ஆய்வு செய்யாமல் உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் உங்கள் செயல் திட்டத்தை காட்டுங்கள்.

திமுக ஐடி விங் வெளியிட்ட மற்றொரு பதிவில், மாண்பு இல்லாத 'மாண்புமிகு' முதல்வர்! நாவடக்கத்தை மறந்தால் மக்கள் அடக்கத் தயங்க மாட்டார்கள்! மாநிலத்தின் முதலமைச்சர் என்ற பொறுப்புக்கும், அந்த இருக்கையின் கண்ணியத்திற்கும் துளியும் சம்பந்தமில்லாமல், மூன்றாந்தர வீதிப் பேச்சாளரைப் போலத் தரம் தாழ்ந்து பேசுவதை முதலமைச்சர் விஜய் நிறுத்திக்கொள்ள வேண்டும்! ‘ஓடு.. ஓடு..’, ‘கொளத்தூரில் கொத்து பரோட்டா’, ‘வெளுத்து விடுங்க’ என உங்கள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும், இந்த மாநிலத்தின் நிர்வாகத்தையே கேலிக்கூத்தாக்கும் துர்நாற்றம் வீசும் வார்த்தைகளாகவே இருக்கின்றன.

ஒரு முதலமைச்சருக்கு அறவே அழகல்ல

நீங்கள் பின்பற்றும் கொள்கைத்தலைவர்களின் பெயர்களைக் வெறும் அடையாள அரசியலுக்காக மட்டும் பயன்படுத்தாமல், குறைந்தபட்சம் அவர்களின் பண்பையாவது உங்கள் பேச்சில் வெளிப்படுத்துங்கள். ‘வாய் இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவேன்’ என்ற உங்கள் திமிர் பிடித்த பேச்சு, ஒரு முதலமைச்சருக்கு அறவே அழகல்ல. நாவடக்கம் என்பது உங்களுக்கு மிக மிக அவசியமான ஒன்று! பொறுப்புணர்ந்து பேசக் கற்றுக்கொள்ளுங்கள்; இல்லையெனில், மக்களின் கோபத்தால் அந்த நாக்கு நிச்சயம் அடக்கப்படும்! என திமுக ஐடி விங் பதிவிட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks