திமுக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த நிலையில்,திமுகவிற்கும் தவெகவிற்கும் இடையே வார்த்தை மோதல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் விஜய் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்த திருச்செந்தூர் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டியில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் திமுக பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரை ஒருமையில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மார்க்கண்டேயன் இன்று அதிகாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விஜய்யை விமர்சித்த திமுக எம்எல்ஏ

கொத்து புரோட்டா போட போறாராம், உன்னை போல ஆயிரக்கணக்கான பரோட்டா கடைகளை நாங்க பார்த்திருக்கிறோம்.. நீ எவ்வளவு கேவலமாக பேசினீர்கள், சட்டமன்றத்தை கூட்டும் போது உனக்கு(விஜய்) எலும்பு இருக்காது, உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம், சட்டமன்றத்தை கூட்டிப் பார் என மார்க்கண்டேயன் பேசியிருந்தார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து தமிழக வெற்றி கழகத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திமுக எம்ல்ஏ மார்க்கண்டேயன் பேசிய வீடியோ ஆடியோ ஆதாரங்களை திரட்டிய காவல்துறை இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

மார்க்கண்டேயன் கைது

திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு அவரது ஆதரவாளர்கள் மற்றும் திமுக கட்சியினர் போலீசாரிடம் எதிர்ப்பு தெரிவித்து அவரைக் கொண்டு செல்ல விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டயனை போலீசார் அழைத்து செல்கின்றனர்.

கனிமொழி கண்டனம்

இது தொடர்பாக திமுக துணைப்பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்பியியுமான கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும். உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கனிமொழி வலியுறத்தியுள்ளார்.

Source: Read Full Article