DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!

DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
News Image

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக - அதிமுக என்று இரண்டு கட்சிகளில் ஒரு கட்சி மட்டுமே தமிழ்நாட்டை கடந்த அரை நூற்றாண்டுகளாக ஆட்சி செய்து வந்த நிலையில், புதிய கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது.

தேர்தல் தோல்வி:

திமுக-வை தங்களது அரசியல் அதிகாரியாக அறிவித்து களமிறங்கிய முதல் தேர்தலிலே தவெக ஆட்சியைப் பிடித்தது. கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினையே தோற்கடித்தது. இந்த தேர்தல் தோல்வி திமுக-வினர் மத்தியில் பெரும் வேதனையை உண்டாக்கியுள்ளது.

தேர்தல் தோல்விக்கு விஜய் மீதான எதிர்பார்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருந்தாலும், திமுக அரசின் மீதான விமர்சனங்கள், கட்சியில் பலரும் முறையாக பணியாற்றது என்று பல விஷயங்களும் காரணமாக அமைந்தது. இதை களைவதற்கு உடனடியாக மு.க.ஸ்டாலின் கட்சியில் பணிகளைத் தொடங்கினர். இதற்காக நேரடியாக அனைவருடனும் ஆலோசனை நடத்தியதுடன், கட்சி மறுசீரமைப்புக்குழு ஒன்றையும் அமைத்தார்.

மு.க.ஸ்டாலின் ஆலோசனை:

லண்டனில் இருந்து மீண்டும் சென்னை மு.க.ஸ்டாலின் மறுசீரமைப்புக்குழு  உறுப்பினர் தங்கம் தென்னரசுவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். நீண்ட நேரம் நடந்த இந்த ஆலோசனையில் திமுக-வின் இந்த தேர்தல் தோல்விக்கு திமுக-வின் மாவட்டச் செயலாளர்கள் பலரும் காரணம் என்று தெரியவந்துள்ளது. திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது முதலே புதிய வேட்பாளர்கள் பலருக்கும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.

பறிபோகிறது மாவட்டச் செயலாளர்கள் பதவி:

இதையடுத்து, தேர்தல் தோல்விக்கு காரணமான 20 மாவட்டச் செயலாளர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலினுக்கு தங்கம் தென்னரசு பரிந்துரைத்துள்ளார். அதேசமயம், திடீரென அவர்களின் பதவியை பறித்தால் அவர்களது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி உண்டாகலாம் என்பதால் அவர்களுக்கு மாநில அளவில் ஏதேனும் பொறுப்புகளை வழங்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டத்திற்கு திமுக-வை கொண்டு செல்லும் நோக்கில் மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவுகளை எடுத்து வரும் சூழலில், விரைவில் திமுக-வின் முக்கிய புள்ளிகளான பல மாவட்டச் செயலாளர்களின் பதவிகள் பறிக்கப்படும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

காய் நகர்த்தும் புதியவர்கள்:

திமுக-வைப் பொறுத்தமட்டில் மாவட்டச் செயலாளர்கள் மிகவும் அதிகாரம் மிக்கவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கே எம்எல்ஏ மற்றும் எம்பி-க்கள் சீட் வழங்கப்படும் என்பதால் மாவட்டச் செயலாளர் பதவி மிகவும் சக்திவாய்ந்த பதவியாக திமுக-வில் உள்ளது. இதனால், நீண்ட நாட்களாக மாவட்டச் செயலாளர் பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் நபர்கள் தற்போது காய் நகர்த்தத் தொடங்கியுள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks