உலகின் மிகவும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி. தோனி ஐபிஎல் தொடரில் மட்டும் ஆடி வரும் நிலையில், விராட் கோலி இந்திய அணியின் ஒருநாள் போட்டியிலும், ஐபிஎல் தொடரிலும் ஆடி வருகிறார்.

உலகக்கோப்பையை நேரில் ரசித்த தோனி, கோலி:

இவர்கள் இருவரையும் கிரிக்கெட் களத்தில் ஒன்றாக பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். இந்த சூழலில், தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் அணியின் போட்டியை இவர்கள் இருவரும் நேரில் கண்டுகளித்துள்ளனர். போர்ச்சுகல் அணிக்காக ரொனால்டோ தனது கடைசி உலகக்கோப்பையில் இந்த போட்டியில் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரிதான காட்சி:

தோனியின் பிறந்தநாளான இன்று இந்த புகைப்படத்தை இருவரது ரசிகர்களும் வைரலாக்கி வருகின்றனர். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் நடந்த இந்த பாேட்டியை இவர்கள் இருவரும் நேரில் கண்டு ரசித்தனர். தற்போது வருடத்திற்கே சில போட்டிகளில் மட்டும் ஆடும் இவர்கள் இருவரும் இதுபோன்று வெளிநாடுகளில் நடக்கும் முக்கியமான விளையாட்டுப் போட்டிகளை நேரில் கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்திய முன்னாள் கேப்டன் தோனி மிகச்சிறந்த கால்பந்து வீரரும் ஆவார். அவர் தனது தொடக்க காலத்தில் கால்பந்தாட்டத்திலே கோல் கீப்பராக இருந்தார். பின்னர், அவரது பயிற்சியாளர் அறிவுறுத்தலிலே கிரிக்கெட் மீது கவனம் செலுத்தினார். தோனியும் ஐபிஎல் தொடர் தவிர மற்ற சமயங்களில் பெரும்பாலும் அவரை பொதுவெளியில் பார்ப்பது அரிதாகவே உள்ளது.

ரசிகர்கள் மகிழ்ச்சி:

விராட் கோலியும் ஒருநாள் மற்றும் ஐபிஎல் போட்டியில் மட்டும் ஆடி வருவதால் அவர் தனது மனைவி அனுஷ்கா மற்றும் குழந்தைகளுடன் இங்கிலாந்தில் குடியேறிவிட்டார். சமீபத்தில் விராட்கோலி இங்கிலாந்தில் நடந்த மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டை நேரில் கண்டு ரசித்தார். அவருடன் ரவி சாஸ்திரி, முன்னாள் இந்திய வீரர் ஷிகர் தவான் ஆகியோரும் உடனிருந்தனர்.

தோனி கேப்டனாக இந்திய அணிக்கு பொறுப்பு வகித்தபோது அவருக்கு மிகப்பெரிய பக்கபலமாகவும், அவரது தளபதி போலவும் திகழ்ந்தவர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது. தோனி 2011 ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி வென்றதற்கு விராட் கோலியும் ஒரு முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல, விராட் கோலி தலைமையிலான இந்திய அணியிலும் தோனி விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தோனி இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கோலி - தோனி இருவரையும் ஐபிஎல் தொடரில் மட்டும் ஒன்றாக காண முடிந்தது. கடந்தாண்டு அதுவும் நிகழாமல் போன சூழலில், தற்போது இருவரையும் ரசிகர்கள் ஒன்றாக கண்டிருப்பது மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Source: Read Full Article