அமெரிக்கா- ஈரான் போர்- சிலிண்டர் தட்டுப்பாடு

நவ நாகரீக காலத்தில் அடுப்பிற்கு பதிலாக அனைத்து தரப்பு மக்களும் சமையல் கேஸ் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். இதனால் சமையல் எரிவாயுவை நம்பி தான் இன்றைய கால கட்டமானது உள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டதையடுத்து அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டிய கச்சா எண்ணெய் முழுமையாக தடைபட்டது. இதனால் வீட்டு உபயோக சிலிண்டர், வர்த்தக சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலையானது பல மடங்கு அதிகரித்தது. இதனால் ஒட்டல்களில் உணவு பொருட்களின் விலையும் உயர்வை சந்தித்தது.

முடிவிற்கு வந்த போர்

இது மட்டுமில்லாமல் வர்த்தக சிலிண்டர் விநியோகமும் தடைபட்டது. ஒரு வர்த்தக சிலிண்டர் விலை கள்ள சந்தையில் 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. எனவே எப்போது போர் முடிவடையும், மீண்டும் இயல்பு நிலை திரும்பும் என மக்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் அமெரிக்கா- ஈரான் இடையே போர் ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து ஹார்மூஸ் ஜலசந்தி திறக்கப்பட்டது. இதனால் கப்பல் போக்குவரத்து மெல்ல மெல்ல இயல்பு நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது.

குறைந்தது சமையல் எரிவாயு விலை

இந்த நிலையில், ஒவ்வொரு மாதமும் தொடக்கத்தில் சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில், இன்று காலை வணிக சிலிண்டர் விலையானது அதிரடியாக குறைந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வர்த்தக எல்பிஜி சிலிண்டரின் விலை சுமார் 172.50 ரூபாய் குறைந்து 3,106 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் 957.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Source: Read Full Article