Cockroach Delhi Protest : டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?

Cockroach Delhi Protest : டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
News Image

டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி போராட்டம்

மழைக்கால கூட்டத்தொடருக்காக மக்களவை இன்று தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் தலைநகரான டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் அனைவரையும் திரும்பிபார்க்கவைத்துள்ளது. அந்த வகையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லியில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாராளுமன்றத்திற்குச் செல்வோம் ( சலோ சன்சத்) என்ற பேரணியை நடத்தி வருகின்றனர்.

இந்த போராடத்தில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டு பாராளுமன்றம் நோக்கி செல்ல முற்பட்டனர். இதனால் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி சம்பவமும் அரங்கேறியது. இதனால் ஆயுதம் ஏந்திய துணை ராணுவப்படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டுள்ளதால் போர்க்களம் போல் பாராளுமன்ற அருகில் காட்சியளித்து வருகிறது.

இன்று பாராளுமன்றம் தொடங்கிய நிலையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பாராளுமன்ற வளாகம், குடியரசு தலைவர் மாளிகை என பல இடங்களில் தடுப்புகள் அமைத்து துணை ராணுவ பாதுகப்பு படையினர் பணியில் ஈடுபட்டனர்.

VIDEO | Delhi: As the CJP's march protest swells, a multi-tiered security lockdown has been put to place to prevent the thousands of marching protesters from breaching the area.

Security personnel physically secured the massive iron gates of the Parliament complex. Red fire… pic.twitter.com/DbS6gWbRtX
— Press Trust of India (@PTI_News) July 20, 2026

போராட்டத்திற்கான காரணம் என்ன.?

நீட் மற்றும் அரசு வேலை தேர்வுகளில் கேள்வித்தாள் கசிவு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகவும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி குற்றம்சாட்டி வருகிறது. தேர்வு முறைகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனவும், கல்வி நிர்வாகத்தின் பொறுப்புணர்வு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தி வருகின்றனர். மேலும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜிமானா செய்ய வேண்டும் என போராட்டகாரர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில் தான் போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டு, பாராளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற நிலையில் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் டெல்லியில் பதற்றமான நிலை நீடித்து வருகிறது.

VIDEO | Delhi: Security heightened inside the premises of the parliament; security personnel on a high alert.

Visuals of security deployment

(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/gvM5yOc8oc
— Press Trust of India (@PTI_News) July 20, 2026

ராஜிமானா செய்வாரா அமைச்சர்.?

நீட் வினாத்தாள் கசிவு, நீட் தேர்வு உள்ளிட்ட அரசு தேர்வுகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி களத்தில் இறங்கியுள்ள நிலையில், அமைச்சர் தர்மேந்திர பிரதான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். எனவே அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். எனவே இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகே போராட்டத்தின் முடிவிற்கு வருமா.? என தெரியவரும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks