தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவ்வப்போது சில இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இன்று தலைமைச் செயலகத்தில் தனது பணிகளை முடித்த விஜய், ஓமந்தூரார் மெட்ரோ நிலையத்தில் இருந்து நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயிலில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அன்பு முத்தம் தந்த பெண்:

முதலமைச்சர் விஜய் மெட்ரோ ரயிலில் வருகிறார் என்ற தகவல் அறிந்ததும் அவரைப் பார்ப்பதற்காக மெட்ரோ வாசலிலும், மெட்ரோ ரயில் நிலையத்தின் உள்ளேயும் மக்கள் குவிந்தனர். ஓமந்தூரார் மெட்ரோ நிலையத்தில் மெட்ரோ ரயிலில் முதலமைச்சர் விஜய் ஏறியதும் அங்கே உள்ளே இருந்த பயணிகள் பலரும் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர்.

பயணிகள் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார் விஜய். அப்போது, அங்கே இருந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் விஜய்யைப் பார்த்த மகிழ்ச்சியில் அவரது கையை இறுகப் பற்றிக்கொண்டு அவரது கையிலே முத்தம் கொடுத்தார். பின்னர், விஜய் அவரை இருக்கையில் அமரச் சொன்னதும் விஜய் பக்கத்திலே அமர்ந்து கொண்ட அந்த பெண் முதலமைச்சர் விஜய்யின் தோளில் சாய்ந்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.

#CMVijay Metro Rail Visuals ❤️ pic.twitter.com/bIpqkilUHT

— Vijay Fans Trends (@VijayFansTrends) July 29, 2026

செல்ஃபி எடுத்த பயணிகள்:

பின்னர் ரயிலின் உள்ளே இருந்த மற்ற பயணிகளிடமும் பேசிய விஜய் மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவரிடம் பேசினார். விஜய்யுடன் மெட்ரோ ரயிலின் உள்ளே இருந்த பயணிகள் பலரும் செல்ஃபி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் ஆய்வு:

நந்தனம் மெட்ரோவில் இறங்கிய விஜய்யை காண்பதற்காக இரு புறமும் நூற்றுக்கணக்கில் மக்கள் குவிந்தனர். அவர்களுக்கு கை காட்டிச் சென்ற விஜய் நந்தனத்தில் உள்ள மெட்ரோ அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்தார். பின்னர், கிண்டி கத்திப்பாராவில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வரும். அங்கு 100 அடி உயரத்தில் நடைபெற்று வரும் மெட்ரோ நிலைய பால பணிகளை மேலே சென்று பார்வையிட்டார்.

கத்திப்பாராவிலும் விஜய் வருவது குறித்து தகவலறிந்த பொதுமக்கள் குவிந்தனர். பின்னர், முதலமைச்சர் விஜய் தனது இல்லத்திற்குச் சென்றார். ஒரு நடிகராக தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விஜய்யை தற்போதும் பொதுமக்கள் பலரும் முதலமைச்சர் என்பதைக் காட்டிலும் ஒரு நடிகராக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article