CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!

CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
News Image

சாலை ஒப்பந்தத்தாரரிடம் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில் தவெக நிர்வாகி வீராசாமி என்பவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் அதிரடியாகவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

லஞ்சம், ஊழல் இல்லாத தமிழ்நாடு இலக்கு

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான, தூய ஆட்சியைத் தருவேன் என வாக்குறுதி அளித்து தவெக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சிக்கு வந்து விட்டோம் என ஆட வேண்டாம் என பதவியேற்ற நாளே தன் கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தினார். அதையும் மீறி நடப்பவர்களை கட்சியை விட்டு நீக்குவதோடு மட்டுமல்லாமல் சட்ட நடவடிக்கையும் எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே விஜய் முதலமைச்சரான பிறகு அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவது பெருமளவில் குறைந்து விட்டதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர். 100 சதவிகிதம் ஊழல் ஒழிக்கப்படும் என்பதில் தவெக அரசு உறுதியாக உள்ளது. கடந்த வாரம் முதலமைச்சர் விஜய் கரூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது எக்காரணம் லஞ்சம் கொடுக்காதீங்க என வெளிப்படையாக அறிவித்தார். மேலும் இதுதொடர்பாக புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் வாங்கியதாக தவெக நிர்வாகி மீது புகார்

இப்படியான நிலையில்  செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளராக பதவி வகித்து வந்த வீரா [எ] வீராசாமி என்ற நபர் சாலை ஒப்பந்த பணிகளுக்காக ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக நேற்று முன்தினம் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. அதோடு மட்டுமல்லாமல் பணம் அனுப்பிய ஸ்க்ரீன்ஷாட்டும் வெளியிடப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேடையில் லஞ்சத்தை ஒழிப்பேன் என தவெக தலைவர் விஜய் சொல்கிறார். நிஜத்தில் நிர்வாகியே லஞ்சம் பெறுகிறார் என எதிர்க்கட்சிகள் சரமாரியாக கண்டித்தன.

ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை வீராசாமி மறுத்தார். லஞ்சம் வாங்குபவர் யாராவது சொந்த நம்பருக்கு பணம் கொடுக்க சொல்வார்களா?.. இது முதலமைச்சர் விஜய்க்கு அவப்பெயர் ஏற்படுத்த செய்யக்கூடிய செயல் என விளக்கம் கொடுத்தார். எனினும் அடுத்த சில மணி நேரங்களில் வீரா என்கிற வீராசாமி  கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் மற்றும் பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Also Read: ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?

தாழம்பூர் காவல் நிலையத்தில் சாலை ஒப்பந்ததாரர் நவீன் வீராசாமி தன்னை மிரட்டி ரூ.1.30 லட்சம் பணம் பெற்றதாக புகார் தெரிவித்ததன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து வீராசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.  அவரை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு தொடர்பான தகவல்களை கேட்டறிந்த நீதிமன்றம் வீராசாமியை ஜூலை 29ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் லஞ்சம் பெற்றவர்கள் மீது தயவு தாட்சாணையின்றி முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks