CM Vijay: கையை காட்டிய முதலமைச்சர்.. விஜய்யைப் பார்க்க ஓடோடி வந்த பெண்கள் - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

CM Vijay: கையை காட்டிய முதலமைச்சர்.. விஜய்யைப் பார்க்க ஓடோடி வந்த பெண்கள் - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ
News Image

தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றது முதலே அவரது செயல்பாடுகள் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ-வாக பொறுப்பு வகிக்கிறார்.

புகைப்படம் எடுக்க அழைத்த விஜய்:

இன்று தனது பெரம்பூர் சட்டமன்ற அலுவலகத்திற்கு நேரில் சென்று அந்த அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர், அங்கே பொதுமக்கள் சிலருக்கு நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருந்த சான்றிதழ்களை வழங்கினார். மேலும், வியாசர்பாடி முனையத்தில் இருந்து இயங்கும் மின்சார பேருந்து முனையத்தை நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, அந்த பேருந்தின் நடத்துனராகிய பெண் ஒருவர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நின்று புகைப்படம் எடுத்தார். அப்போது, அங்கிருந்த மற்றொரு பெண் ஓட்டுநர் முதலமைச்சர் விஜய்க்கு கை காட்டினார். அவருக்கு கை காட்டிய விஜய் அவரையும் தனது அருகே அழைத்தார்.

தூரமா நின்னு பாத்துட்டு இருந்தவங்களை எல்லாம் கூப்பிட்டு பக்கத்துல நிக்க வச்சு அன்போட போட்டோ எடுத்துகிட்டார்...❤️❤️❤️ pic.twitter.com/ZuiJp599Cl
— Praveenkumar (@pravinSharma_45) July 13, 2026

அப்போது, முதலமைச்சர் விஜய் பின்னால் இருந்து இதைப் பார்த்த பணிமனையில் பணியாற்றும் பெண்கள் மகிழ்ச்சியில் சத்தமிட, அவர்களைத் திரும்பிப் பார்த்த விஜய் அவர்களையும் தன்னுடன் வந்து நிற்குமாறு கூறினார். பின்னர், அந்த பணிமனையில் இருந்த ஊழியர்கள் அனைவரும் விஜய்யுடன் புகைப்படம் எடுப்பதற்கு ஓடோடி வந்தனர். அவர்கள் அனைவருடனும் இணைந்து முதலமைச்சர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அவர் நியாய விலைக்கடைகளுக்கு நேரில் சென்று அங்கே பொருட்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது? என்பது குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், அவரே சில பயனாளிகளுக்கு அரிசி, பருப்பு எடையிட்டு வழங்கினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks