CM Vijay Perambur: ”என் தொகுதிக்கு இதெல்லாம் வேண்டும்” பெரம்பூருக்காக CM விஜயின் 7 கோரிக்கைகள் - ரூ.3 கோடி நிதி

CM Vijay Perambur: ”என் தொகுதிக்கு இதெல்லாம் வேண்டும்” பெரம்பூருக்காக CM விஜயின் 7 கோரிக்கைகள் - ரூ.3 கோடி நிதி
News Image

CM Vijay Perambur Constituency:  பெரம்பூரில் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் விஜய் பட்டியலிட்டுள்ள 7 திட்டங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

பெரம்பூருக்காக முதலமைச்சர் விஜய்

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரான பிறகு, தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு முதல்முறையாக விஜய் நேற்று சென்றார். அங்கு அமைந்துள்ள தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்துவைத்தார. பின்பு புதிய பயனர்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட பணிகளை மேற்கொண்டதோடு, பல்வேறு ஆய்வுப்பணிகளிலும் ஈடுபட்டார். தனது தொகுதி மக்களின் குறைகளை அறிய, மக்கள் சேவை தளம் எனும் புதிய செயலியின் பயன்பாட்டையும் தொடங்கி வைத்தார். இதன் மூலம் அந்த பகுதிகளில் நிலவும் பல்வேறு அடிப்படை பிரச்னைகளுக்கு தீவு காணக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பெரம்பூரில் நலத்திட்டங்களை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி ஆணையாளர் சமீரனுக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் கோரிக்கை:

முதலமைச்சர்  ஜோசப் விஜய், பெரம்பூர் தொகுதிக்கு தனது முழு எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 3 கோடி மதிப்பிலான திட்டங்களை முன்மொழிந்து  சென்னை மாநகராட்சி ஆணையாளர் சமீரனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகளின் அடிப்படையில் அனைத்து திட்டங்களின் பணிகளும் உடனே தொடங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் சமீரன் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த கடிதத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கான மேம்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அனைத்துப் பணிகளும் உடனடியாகத் தொடங்கும் எனவும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் சமீரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் பட்டியலிட்டுள்ள கோரிக்கைகள்:

ரூ. 50 லட்சம் செலவில், சிசிடிவி கேமரா மற்றும் வைஃபை வசதியுடன், கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்ட 24x7 நேரலை ஒளிபரப்புடன் கூடிய ஆறு பேருந்து நிறுத்தங்கள் அமைக்க வேண்டும். இதற்கான இடங்களாக எருக்கஞ்சேரி ஹை ரோடு, சிட்கோ நகர், எஸ்.எம். நகரில் இரண்டு இடங்கள், எம்.கே.பி. நகர் மற்றும் வியாசர்பாடி மேம்பால சந்திப்பு தேர்வு செய்யப்பட உள்ளன

மேயர் கிருஷ்ணமூர்த்தி நகரில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான விளையாட்டு வளாகம் கட்டப்படும்.

அம்பேத்கர் கலைக் கல்லூரியில் ரூ. 25 லட்சம் செலவில் விளையாட்டு வசதிகள் மேம்படுத்தப்படும். புதிய விளையாட்டு உபகரணங்கள் வாங்கப்படுவதுடன், கூடைப்பந்து, கிரிக்கெட் மைதானம் மற்றும் கபடி மைதானமும் மேம்படுத்தப்படும்.

ரூ.50 லட்சம் செலவில் சத்தியமூர்த்தி நகரில் டயாலிசிஸ் பிரிவு அமைக்க வேண்டும்

எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் ரூ.25 லட்சம் செலவில் தற்காலிகப் பணியாளர் ஓய்வறை.

ரூ.50 லட்சம் செலவில் அம்பேத்கர் கல்லூரியில் நூலகம் மற்றும் கல்வி மையம்.

ரூ.50 லட்சம் செலவி அங்கன்வாடிகளுக்குத் தேவையான உபகரணங்களைக் கொள்முதல் செய்தல்.

இதையும் படியுங்கள்:CM Vijay: விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ மாஸ்டர் செல்ஃபி”

தொகுதி மேம்பாட்டு நிதி

தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள ஆண்டுதோறும் ரூ.3 கோடி தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதியைப் பயன்படுத்தி சாலை வசதி, குடிநீர், பள்ளிக் கட்டடங்கள், தெருவிளக்குகள் போன்ற வளர்ச்சிப் பணிகளை எம்.எல்.ஏ.க்கள் பரிந்துரைக்கலாம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks