CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?

CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
News Image

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி வாகை சூடி, அதிக இடங்களை பெற்ற தமிழக வெற்றிக் கழகம், இன்னும் பிற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்து, முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். அப்போது முதலே தமிழக அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.

நாள்தோறும் அதிரடி மாற்றங்களுடன் செயல்பட்டுவரும் இந்த அரசுக்கு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் ஆகியவை ஆதரவு கொடுத்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர மற்ற கட்சியினருக்கு அமைச்சரவையிலும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. மறுபுறம், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பி-க்கள், மூத்த நிர்வாகிகள் என பலரும் தவெகவில் இணைந்துள்ளனர்.

இடம் மாறும் முதலமைச்சர் அலுவலகம்

இப்படி பல பரபரப்புகளும், அதிரடிகளும் அரங்கேறி வரும் நிலையில், தற்போதைய பரபரப்பு செய்தி என்னவென்றால், அது முதலமைச்சர் விஜய்யின் அலுவலக மாற்றம் தான்.  பல காலங்களாகவே சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தமிழக அரசு தலைமைச் செயலகத்தின் முதன்மை கட்டிடத்தில் தான் முதலமைச்சரின் அலுவலகம் இயங்கி வந்தது.

காமராஜர் காலத்திற்கு முன்னர் இருந்தே முதலமைச்சர் அறை அங்குதான் இயங்கி வருகிறது. அதாவது, 60 ஆண்டுகால வரலாற்றை உடையது அந்த அலுவலகம். கோட்டையின் பிரதான பாரம்பரியமான கட்டிடத்தின் முதல் தளத்திலிருந்தே இதற்கு முன் இருந்த முதலமைச்சர்கள் ஆட்சிப் பொறுப்புகளை கவனித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது அதே வளாகத்தில் உள்ள வேறு கட்டிடம், அதாவது 10 அடுக்கு மாடிகளைக் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு முதலமைச்சர் விஜய்யின் அறை மாற்றப்படுகிறது. அங்கு, முதலமைச்சரின் அறையோடு சேர்த்து, அவரது நான்கு முதன்மைச் செயலாளர்களின் அறைகளும் அமையவுள்ளன.

புதிய அலுவலகத்தில் என்ன ஸ்பெஷல்.? ஏன் இந்த மாற்றம்.?

புதிய அலுவலகம் அமையும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் தற்போது 34 அரசுத் துறைகளின் முதன்மைச் செயலாளர்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதான் முக்கிய நிர்வாக மையமாக இருந்து வருகிறது. இந்த கட்டிடத்தின் 10-வது மாடியில், மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உடனான வருடாந்திர மாநாடுகள் இதுவரை நடத்தப்பட்டு வந்தன. அதற்கான மாநாட்டு அரங்கமும், உணவருந்தும் கூடமும் அங்கு இருந்தது.

அது தான் தற்போது, முதலமைச்சர் விஜய்யின் விருப்பப்படி, புதிய சர்வதேச தரத்திலான அலுவலகமாக மாறுகிறது. இந்த அலுவலகத்தின் ஸ்பெஷல் என்று சொல்லப்போனால், அங்கிருந்து கடலின் அழகை கண்டு ரசிப்பதோடு, மன அமைதிக்கும் அது வழிவகுக்கும்.

மறுபுறம், அரசு இயந்திரத்தை இயக்கிவரும் அதிகாரிகளுடன், முதலமைச்சர் இப்போது நேரடி தொடர்பில் இருக்கலாம். அமைச்சர்களிடம் கூறி, அது அதிகாரிகளுக்கு சென்று, பிறகு வேலை நடப்பது என்று இல்லாமல், தற்போது முதலமைச்சரே நேரடியாக அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க முடியும். இதனால், வேலைகள் விரைவாக நடைபெறும்.

மாற்றத்திற்கு காரணம் ஜோதிடமா,  இட நெருக்கடியா.?

முதலமைச்சர் விஜய்யின் அலுவலக மாற்றத்திற்கு வாஸ்து அல்லது ஜோதிடமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்ற தகவலும் உலா வருகிறது. அதாவது, தொடர்ந்து உச்சத்தில் இருக்க வேண்டுமானால், முதலமைச்சரின் அலுவலகமும் உயரத்தில் இருக்க வேண்டும் என்று அவரது ஆஸ்தான ஜோதிடர் கூறியதாலேயே இந்த மாற்றம் நிகழ்வதாகவும் பேச்சு அடிபடுகிறது.

ஆனாலும், தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடி காரணமாகவும், முதலமைச்சரை பார்க்க வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டே இந்த அலுவலக மாற்றம் நிகழ்வதாகவும் கூறப்படுகிறது.

முதலமைச்சர் விஜய்யின் அறை அமையும் தளத்தில் ஏற்கனவே இயங்கி வந்த தகவல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை, வணிக வரித் துறையின் சில பிரிவுகள் அனைத்தும் வேறு இடங்களுக்கு மாற்றப்படுகின்றன. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்த இடமாற்றம் முடிவடையும் என தெரிவிக்கப்படுகிறது. எனினும், புதிய அலுவலகம் அமையும் போதிலும், பிரதான கட்டிடத்தில் ஏற்கனவே உள்ள அலுவலகத்தையும் முதலமைச்சர் பயன்படுத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks