CM Vijay: லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?

CM Vijay: லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
News Image

CM Vijay IAS Transfer: முதலமைச்சர் விஜய் அதிரடியாக பணியிடமாற்றம் செய்த ஐஏஎஸ் அதிகாரிகளில் சுப்ரியா சாகு மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கவனிக்கத்தக்கவர்களாக உள்ளனர்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடமாற்றம்:

புதியதாக ஆட்சி பொறுப்பேற்பவர்கள் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்வது என்பது இயல்பானது. ஆனால், தற்போது தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகள் பெரும்பாலானோர் திராவிட கட்சிகளின் ஆட்சியின் கீழ் தொடர்ந்து பணியாற்றிய அனுபவம் கொண்டவர்களாவர். இதனால், தங்களுக்காக உண்மையாக உழைக்கும் அதிகாரிகளை அடையாளம் காண்பதில் தவெக அரசு தீவிரமாக உள்ளது. அந்த வகையில் மேற்கொள்ளப்பட்ட பணியிட மாற்றங்கள் சில வரவேற்பை பெற்றாலும், சில அதிருப்தியை ஏற்படுத்தினர். சில அதிகாரிகள் கடந்த ஆட்சி காலத்தில் இருந்த அதே பதவியிலேயே தொடர்கின்றனர். இந்நிலையில் தான், மேலும் 19 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

முக்கிய அதிகாரிகளை தூக்கி அடித்த அரசு

19 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டாலும் அதில் ஒரு சிலரின் பணியிடமாற்றங்கள் தான் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. காத்திருப்பு பட்டியலில் இருந்த உமாநாத் தற்போது தொழில்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுச்சூழல் துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு தொழில் முனைவோர் மேம்பாடு ஆணையராகவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குநராகவும் நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று பேருமே கடந்த காலங்களில் தமிழ்நாடு அரசின் பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த நிலையில், தற்போது பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லாத பதவிகளுக்கு தூக்கி அடிக்கப்பட்டுள்ளனர்.

லிஸ்ட் போட்ட யூட்யூபர்:

தவெக ஆட்சியில் அருண் ஐபிஎஸ் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டது பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் அதிர்வலைகளை எழுப்பியது. ஏற்கனவே, கடந்த ஆட்சி காலம் முதலே  அருண் மீது யூட்யூபர் சவுக்கு சங்கர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தபோது, திமுக பிரமுகரை போன்றே அருண் செயல்பட்டதாகவும், பணத்தை பெற்றுக்கொண்டு பலர் மீது குண்டாஸ் வழக்குகளை பதிவு செய்ததாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். இந்த சூழலில் தான் யாரும் எதிர்பாராத விதமாக பொறுப்பேற்ற இரண்டே மாதங்களில் அருண் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த வரிசையில் சவுக்கு சங்கர் அடுக்கடுக்காக குற்றம்சாட்டி வந்த உமாநாத், சுப்ரியா சாகு ஆகியோரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்: சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி

குற்றச்சாட்டுகள் என்ன?

அமைச்சர் வெங்கட்ராமனின் துறையின் கீழ் பணியாற்றி வந்த உமாநாத், அமைச்சருக்கே தெரியாமல் டெண்டர் விட்டு வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக அண்மையில் குற்றச்சாட்டுகள் எழுந்தது. சுகாதாரத்துறையில் தனக்கு ஆதரவான அதிகாரிகளை நியமித்து அங்கும் ஊழலில் ஈடுபட முயன்றதாகவும் கூறப்படுகிறது

திமுக ஆட்சிகாலத்தில் சுப்ரியா சாகு தலைமை செயலகத்தில் மட்டுமின்றி திமுக வட்டாரத்திலும் பெரிய அளவில் கோலோச்சியதாகவும், நிதித்துறை அமைச்சர் பதவியில் இருந்து பழனிவேல் தியாகராஜன் நீக்கப்பட்டதில் கூட இவரின் பங்களிப்பு இருப்பதாக சவுக்கு சங்கர் குற்றம்சாட்டி இருந்தார்.

பொதுவாக யார் ஆட்சிக்கு வந்தாலும் அவருக்கு நெருக்கமாகவும், உண்மையாகவும் ராதாகிருஷ்ணன் இருப்பார் என கூறப்படுகிறது. ஆனால், மின்சாரத்துறையில் அரசு தயாரித்த வெள்ளை அறிக்கையில் போதுமான பங்களிப்பை அவர் வழங்கவில்லை எனவும், நிலக்கரி உள்ளிட்ட கொள்முதலில் நடந்த ஊழலை வெளிக்கொணர தவறவிட்டதாகவும், மின்வாரிய தலைமையகத்தில் ஹார்ட் -டிஸ்குகள் திருடுபோனதில் தொடர்பு இருக்கலாம்? என்பது போன்ற காரணங்களால் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks