சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(29.07.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூலை 29-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி

வேளச்சேரி மெயின் ரோடு

டி.ஏ.கோயில் 1-வது பிரதான சாலை மற்றும் 2-வது குறுக்குத் தெரு

குருநானக் கல்லூரி

அண்ணா கார்டன்

கே.ஆர். ராமசாமி தெரு

நாகேந்திர நகர்

மேட்டுத் தெரு

புவனேஸ்வரி நகர்

பெத்தேல் அவென்யூ

விஜிபி செல்வா நகர் 1-வது மெயின் ரோடு

விஜிபி செல்வா நகர் 2-வது மெயின் ரோடு

முத்துகிருஷ்ணன் தெரு

சீதாராம் நகர் மெயின் ரோடு

அடையார்

1-வது பிரதான சாலை

காந்தி நகர்

இந்திரா நகர்

கிருஷ்ணமாச்சாரி சாலை

கோகுல் ஆர்கேட்

சர்தார் படேல் சாலை

பெசன்ட் நகர் 4-வது பிரதான சாலை

32 முதல் 35 வரையிலான குறுக்குத் தெருக்கள்

5-வது அவென்யூ

பாலவாக்கம்

கோவிந்தன் நகர் 1 முதல் 7-வது தெருக்கள்

மணியம்மை தெரு

கோலவிழி அம்மன் 1-வது முதல் 15-வது தெருக்கள்

எம்ஜிஆர் நகர் 1-வது முதல் 4-வது தெருக்கள்

கிருஷ்ணா நகர் 1-வது முதல் 8-வது தெருக்கள்

பச்சையப்பன் தெரு

டிஎஸ்ஜி நகர்

பெரியார் தெரு

கந்தசாமி நகர் 8-வது முதல் 10-வது தெருக்கள்

காந்தி நகர் 1-வது தெரு முதல் 4-வது தெரு வரை

தொழிற்பேட்டை

ஆதம்பாக்கம்

பை பாஸ் மெயின் ரோடு

கங்கை நகர் 1 முதல் 5-வது தெருக்கள்

சக்தி விஜயலட்சுமி நகர்

பாலாஜி காலனி

அஷ்டலட்சுமி நகர் 1 முதல் 11-வது தெருக்கள்

பல்லாவரம்

பாரதி நகர் மெயின் ரோடு

பச்சையம்மன் கோயில் தெரு

இளங்கோஅடிகள் தெரு

கண்ணகி தெரு

கம்பர் தெரு

திருவள்ளுவர் தெரு

மாலைமகள் தெரு

திருமுல்லைவாயல்

கரலப்பாக்கம்

காவனூர் கேடிபி ரோடு

மேல் கொண்டையார்

கதவூர்

வெள்ளச்சேரி

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article