Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே

Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
News Image

Chennai Bengaluru Expressway: சென்னை - பெங்களூரு இடையேயான விரைவுச்சாலை பயன்பாட்டிற்கு வரும்போது, இருநகரங்களுக்கு இடையேயான பயணமானது 3 மணி நேரங்களில் முடிவடையும்.

சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை..!

நாட்டின் மிகவும் முக்கியமான உட்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றான சென்னை - பெங்களூரு விரைவுச்சாலையின் பணிகள், வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையுமென, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வணிகரீதிகாய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு நகரங்களுக்கு இடையேயான, பயணத்தை வேகமானதாகவும், திறமையானதாகவும் மாற்றுவதற்காக இந்த விரைவுச்சாலை திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. 2012ம் ஆண்டே திட்டத்திற்கான ஒப்புதல் கிடைத்தாலும், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால், சுமார் 17 ஆயிரத்து 930 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு 2022ம் ஆண்டு தான் அடிக்கல் நாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

3 மாநிலங்களை இணைக்கும் திட்டம்

சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை திட்டமானது தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளா என மூன்று மாநிலங்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 263 கிலோ மீட்டர் நீளத்திற்கான இந்த சாலை பணிகள் 10 கட்டுமான தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் திட்டமிடப்பட்ட 71 கிலோ மீட்டர் நீளத்திற்கான ஹோஸ்கோட்–பெத்தமங்களா வழித்தடம் பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பணிக்காக திறக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு-ஆந்திரப் பிரதேச எல்லைப் பகுதிகளிலும் கட்டுமானப் பணிகள் சுமார் 90 சதவிகிதம் அதாவது 230 கிலோ மீட்டர் நீளத்த்ற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன.

இருப்பினும், நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், ரயில்வே மேம்பாலங்களுக்கான நிலுவையில் உள்ள ஒப்புதல்கள், சட்ட நடவடிக்கைகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சந்தித்த நிதி நெருக்கடிகள் காரணமாக ஸ்ரீபெரும்புதூர்–அரக்கோணம்–காஞ்சிபுரம் வழித்தடப் பணிகள் தாமதமடைந்தன. அவையும் வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும் என கூறப்படுகிறது.

தமிழ்நாடு எல்லைக்குட்பட்ட வழித்தடம்:

தரவுகளின்படி சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை திட்டத்தின் மொத்த செலவு சுமார் 17 ஆயிரம் கோடிக்கும் அதிகமாகும். இதில், தமிழ்நாட்டில் உள்ள 94 கிலோ மீட்டர் நீளத்திற்கு 7 ஆயிரத்து 650 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களின் வழியே இந்த சாலையானது கட்டமைக்கப்பட்டு வருகிறது. அதவாது தமிழ்நாட்டின் தொழிற்சாலைகள் நிறைந்த மற்றும் மாநிலத்தின் உற்பத்தி மையங்களாக விளங்கும் மாவட்டங்கள், அண்டை மாநிலங்களுடன் புதிய சாலை திட்டம் மூலம் எளிதாக இணைக்கப்படுகிறது. இதனால் இந்த பிராந்தியத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி என்பது எளிமையாக மாற உள்ளது. அதேநேரம், நடைபெற்று வரும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக சுமார் 25 கிலோ மீட்டர் நீளத்திற்கான கட்டுமானப் பணிகள் தாமதமாகியுள்ளன.

இதையும் படியுங்கள்: Vijays Box Office: CM விஜயின் வாழ்நாள் வசூல் சாதனையை முறியடிக்குமா ஜனநாயகன்? டாப்பில் லியோ, முதல் 5 படங்கள்

எந்தெந்த மாவட்டங்களை இணைக்கும்..!

சென்னை - பெங்களூரு விரைவுச்சாலையானது ஒட்டுமொத்தமாக 7 மாவட்டங்கள இணைக்கிறது. இதில் தமிழ்நாட்டிலிருந்து மேற்குறிப்பிடப்பட்ட 4 மாவட்டங்கள் போக, கர்நாடகாவில் இருந்து பெங்களூரு மற்றும் கோலார் மாவட்டங்களும், ஆந்திராவில் இருந்து சித்தூர் மாவட்டமும் இணைக்கப்பட உள்ளது. பெங்களூரு தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்தது என அனைவரும் அறிந்ததே. கோலார் மாவட்டம் மாநிலத்தின் மிகப்பெரிய தொழிற்சாலை மற்றும் உற்பத்தி மையமாக உள்ளது. அதேபோன்று ஆந்திராவிற்கு பிரதான தொழிற்சாலைகள் நிறைந்த மையமாக சித்தூர் உள்ளது. இத்தகைய தென்னிந்தியாவின் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டங்கள், ஒரே சாலை திட்டத்தின் மூலம் இணைக்கப்படுவது மிகப்பெரிய பொருளாதாரா ஊக்குவிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 மணி நேர பயணம்..

தற்போதுள்ள உட்கட்டமைப்புகளை பயன்படுத்தினால் ​​சென்னைக்கும் பெங்களூருவுக்கும் இடையிலான சாலைப் பயணம் சுமார் 6 முதல் 7 மணி நேரம் வரை நீள்கிறது. ஆனால், புதிய விரைவுச்சாலை செயல்பாட்டுக்கு வந்தவுடன், பயண நேரம் சுமார் 3 மணி நேரமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான பொதுமக்கள் பயணம், சரக்குப் போக்குவரத்து, தளவாடத் திறன் மற்றும் பொருளாதார இணைப்பு ஆகியவை கணிசமாக மேம்படும். மாநிலத்தின் வருவாயும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks