Chennai Bengaluru Bullet Train: ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்

Chennai Bengaluru Bullet Train: ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்
News Image

Chennai Bengaluru Bullet Train Tender: சென்னை - பெங்களூரு இடையேயான புல்லட் ரயில் திட்டத்தின் மூலம் இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் சுமார் 73 நிமிடங்களாக குறையுமாம்.

சென்னை - பெங்களூரு புல்லட் ரயில்

நாட்டின் மிகவும் முக்கியமான வணிக நகரங்களான சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான பயணத்தை, சிறப்பானதாகவும் எளிதானதாகவும் மாற்றும் வகையில் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான டெண்டரை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தேசிய அதிவேக ரயில் கழகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி,  ஒப்பந்ததாரர் இத்திட்டத்தின் திருத்தப்பட்ட புதிய வழித்தட வரைபடத்தின் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வரும்போது இரண்டு நகரங்களுக்கு இடையேயான ரயில் பயணமானது, 7 மணி நேரத்திலிருந்து 73 நிமிடங்களாக குறையும் என கருதப்படுகிறது.

306 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் இருப்பு பாதை:

சென்னையையும் பெங்களூருவையும் இணைக்கும் நாட்டின் மூன்றாவது புல்லட் ரயில் திட்டம், 306.2 கிலோ மீட்டர் நீளத்திற்கானதாகும். புதியடெண்டரின்படி,  எட்டு ரயில் நிலையங்களைக் கொண்டுள்ள திட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட வழித்தடத்தில் ஒப்பந்ததாரர் பணியாற்ற வேண்டும். சென்னை சென்ட்ரல், பூந்தமல்லி மற்றும் பரந்தூர் ஆகிய மூன்று நிலையங்கள் தமிழ்நாட்டில் அமையவுள்ளன. தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் விரிவான திட்ட அறிக்கையில் பரந்தூரில் ஒரு நிலையத்தை அமைக்கப் பரிந்துரைத்திருந்த நிலையில், புதிய டெண்டரில் அது வருங்கால நிலையம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது அங்கு விமான நிலையம் அமையும் பட்சத்தில் ரயில் நிலையத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்படுமாம். மீதமுள்ள நிலையங்கள் நிறுத்த நிலையங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

73 நிமிடங்களில் பெங்களூரு பயணம்:

சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த புல்லட் ரயில் திட்டமானது 2035-ஆம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், சென்னைக்கும் பெங்களூருவுக்கும் இடையிலான பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகம் வரை  பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள புல்லட் ரயில், தற்போதைய சுமார் ஏழு மணி நேரப் பயண நேரத்தை, ஒரு மணி நேரத்தில் இருந்து 73 நிமிடங்களுக்குள்  குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தீவிரமாக நடைபெற்று வரும் சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை முடிவுறும்போது, சாலைப் பயண நேரத்தை சுமார் மூன்று மணி நேரமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Cheap EV with 400KM Range: நிஜமாவே 400KM ரேஞ்ச் தரும் SUV, 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் கார் - EMI விவரங்கள், அம்சங்கள்

சென்னைக்குள் புல்லட் ரயில் பயணம்:

திட்ட வரையறைகளின்படி, முதல் நிலையம் சென்னை புறநகர் ரயில் நிலையத்தின் மேற்குப் பகுதியில் உருவாக்கப்படும். இது முறையே 100 மீட்டர் மற்றும் 50 மீட்டர் இணைப்புகள் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் சென்னை மெட்ரோ நெட்வொர்க்குடன் இணைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில், சென்னை சென்ட்ரல் அருகே உள்ள 1.7 கி.மீ. சுரங்கப்பாதை உட்பட மூன்று சுரங்கப்பாதைகள் இடம்பெறும். மீதமுள்ள பகுதி, பெரம்பூர், கொளத்தூர், ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ICF), மாதவரம் அருகே உள்ள கிராண்ட் நார்தர்ன் ட்ரங்க் ரோடு, பாடி, சென்னை புறவழிச்சாலை, சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை, அண்ணானூர், பூந்தமல்லி மற்றும் அரக்கோணம் போன்ற முக்கிய இடங்கள் வழியாகச் செல்லும் ஒரு மேம்பால வழித்தடமாக உருவாக்கப்படும்.

நகரங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்துவதையும், முக்கிய நகர்ப்புற மையங்களுக்கு இடையேயான பயண நேரத்தைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் விரிவான அதிவேக ரயில் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே சென்னை-பெங்களூரு புல்லட் ரயில் வழித்தடம் அமைந்துள்ளது.

முன்னதாக இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவையானது மும்பை மற்றும் அகமதாபாத் இடையே அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்தவுடன் இரண்டாவது புல்லட் ரயில் சேவைக்கான பணிக மும்பை மற்றும் புனே இடையே அமைக்கப்பட உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks