வாரிசு இல்லாத நிலையில் சொத்து யாருக்குப் போகும் ? உயில் மற்றும் செட்டில்மென்ட் விதிகள்

வாரிசு இல்லாத நிலையில் சொத்து யாருக்குப் போகும் ? உயில் மற்றும் செட்டில்மென்ட் விதிகள்
News Image

குடும்பத் தலைவர் சொத்து யாருக்கு ?

சொத்து என்பது பெரும்பாலும் குடும்பத் தலைவர் சுயசம்பாத்தியத்தில் வாங்கியதாக இருக்கும். இதை அவர் தன் விருப்பப்படி வாரிசுகளில் யாருக்கு வேண்டுமானாலும் உயில் அல்லது செட்டில்மென்ட் பத்திரம் வாயிலாக வழங்குவதற்கு சட்டத்தில் வழிமுறை உள்ளது.

இதில் சில சமயங்களில் சுய சம்பாத்திய சொத்தை அந்த நபர், தான் உயிருடன் இருக்கும் காலத்தில், வாரிசு அல்லாத அதே நேரத்தில் தனக்கு பிடித்தமான யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

சட்டப்பூர்வ வாரிசுகள் இதை எதிர்ப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால், குடும்பத் தலைவர் உயில் எழுதாமல் இறந்தால், அந்த சொத்தை சட்டப்பூர்வ வாரிசுகள் மட்டுமே தங்களுக்குள் பகிர்ந்துக் கொள்ள முடியும்

கணவருக்கு சொத்தில் உரிமை இல்லை

இதில் சில இடங்களில் சொத்தை பங்கிட்டுக்கொள்வதில் வாரிசுகள் தங்களுக்குள் மோதிக் கொள்வது தனி கதை. இன்னும் சில இடங்களில், பரம்பரை சொத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு செல்வதில் சில குழப்பங்கள் நிலவுகின்றன.

குறிப்பாக, பரம்பரை சொத்தை பெற்ற தந்தை அதை தனக்கு அடுத்த தலைமுறை வாரிசுகளுக்கு பங்கிட்டு கொள்வதில் சட்ட வழிமுறைகள் சீராக உள்ளன. ஆனால், பரம்பரை சொத்தை பாட்டியிடம் இருந்து நேரடியாக பேத்தி ஒருவர் பெறுகிறார் என்று வைத்து கொள்வோம். அந்த பேத்திக்கு திருமணமாகி விட்டது, கணவர் இருக்கிறார், ஆனால் குழந்தைகள் இல்லை எனும் போது அந்த சொத்தை பேத்தியும் அவருடன் சேர்ந்து கணவரும் அனுபவிப்பதில் பிரச்னை இல்லை.

அதில் குழந்தைகள் இல்லாத அந்த பேத்தி இறந்து விடும் நிலையில், அந்த சொத்து யாருக்கு சேரும் என்பதில் சட்டசிக்கல் ஏற்படுகிறது. மேலோட்டமாக பார்த்தால், அவரது கணவர் அதற்கு வாரிசு என்ற அடிப்படையில் பெறலாம் என்ற எண்ணம் எழும். ஆனால், இதில் மனைவியின் பரம்பரை சொத்துக்கு அவரது கணவர் வாரிசாக முடியாது என்று கூறுகிறது.

குறிப்பாக , சொத்து கொடுத்த பாட்டி இன்னும் உயிருடன் இருக்கும் நிலையில், பேத்தியின் கணவர் அதில் உரிமை கோரினால் சட்டம் அதை ஏற்காது. இது போன்ற சூழல் ஏற்பட்டால் பேத்தியின் பெயருக்கு சொத்தை மாற்றிய ஆவணங்களை பாட்டி ரத்து செய்து அதை வேறு ஒருவருக்கு வழங்கலாம்.

குழந்தைகள் இல்லாத பேத்தி இறந்த நிலையில் அவரது உடன் பிறந்தவர்கள் யாராவது ஒருவர் அல்லது அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் கூட வாரிசாக உரிமை கோர வாய்ப்புள்ளது. ஆனால், கணவருக்கு அதில் சட்ட ரீதியாக உரிமை இல்லை என்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ளன.

இது போன்ற நிலையில் உள்ள சொத்துக்கள் விற்பனைக்கு வரும் போது அதை வாங்குவோர், விற்பவரின் பின்னணியில் சட்டச் சிக்கல் உள்ளதா என்று பார்க்க வேண்டும் என்கின்றனர் சட்ட வல்லுனர்கள். சொத்து கொடுத்த பாட்டி இன்னும் உயிருடன் இருக்கும் நிலையில், பேத்தியின் கணவர் அதில் உரிமை கோரினால் சட்டம் அதை ஏற்காது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks