அயோத்தி ராமர் கோயிலை தொடர்ந்து பத்ரிநாத், கேதார்நாத் கோயிலிலும் நிதி முறைகேடு நடைபெற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பக்தர்களிடையே மிகப்பெரிய அளவில் கவலையை உண்டாக்கியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சரயு நதிக்கரையில் அயோத்தி அமைந்துள்ளது. ராம பகவானின் அவதார பூமியாக கருதப்படும் இந்த இடத்தில் பல காலமாக இருந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ராமர் கோயில் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டது. கோயில் கருவறையில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அயோத்தி சென்று ராமரை தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடையில் பல கோடி ரூபாய் காணாமல் போயுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே பத்ரிநாத் கோயில் காணிக்கைகள் மற்றும் நன்கொடைகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளதால் மிகப்பெரிய அளவில் சர்ச்சை வெடித்துள்ளது.

இதுதொடர்பாக பத்ரிநாத், கேதார்நாத் கோயில் குழுவான BKTC தனது பொறுப்பில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் இயங்கும் 52 கோயில்களிலும் கடுமையான கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளது. மேலும் கோயில் வருமானம் மற்றும் செலவினத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. கோயிலுக்கு வரும் காணிக்கைகள், நன்கொடைகள், பரிசுகள், வாடகைகள் மற்றும் பிற வருமானங்களைப் பதிவு செய்ய வேண்டும் எனவும், நன்கொடை எண்ணும் மையங்கள், கணக்குப் பிரிவுகள், கருவூலங்கள், ஓய்விடங்கள் மற்றும் பூஜை கவுன்டர்களில் உள்ள அனைத்து அதிகாரிகளும் சரியாக செயல்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Also Read: Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு

இதுதொடர்பாக ஊடகத்தினரிடம் பேசிய பிகேடிசி தலைவர் ஹேமந்த் திவேதி, “சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் கோயில் குழு மிக தீவிரமாக கணக்கில் கொண்டுள்ளது. இதனை விசாரிக்க ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட ஊழியர்களிடமும் விசாரணை மிக தீவிரமாக நடந்து வருகிறது. குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது. விசாரணை முடியும் வரை தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த வெளிப்படை தன்மை அவசியமாகிறது. மேலும் எதிர்காலத்தில் ஏதேனும் முறைகேடு புகார் வெளிவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது எளிதாக நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வரும் மாதங்களில் புனித யாத்திரை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் சர்ச்சைகளை தடுக்க வேண்டிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற இடங்களில் நடந்தது போல் இங்கு நடக்க நாங்கள் விரும்பவில்லை எனவும் ஹேமந்த் திவேதி கூறியுள்ளார்.

Source: Read Full Article