திருவாரூரில் மனைவி காணாமல்போனதாக புகாரளித்த திருத்துறைப்பூண்டி விவசாயி தற்கொலை வழக்கில் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர் அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே காணாமல் போன தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்தவரிடம் காவலர்கள் தரக்குறைவாக பேசியதோடு, அப்புகாரை ஏற்க மறுத்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான விவசாயத் தொழிலாளி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன. பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுத் தருவதில் முதல் நம்பிக்கையாக இருக்க வேண்டிய காவல்நிலையங்கள், புகாரை ஏற்க மறுத்து அலைக்கழிப்பதும், விசாரணை எனும் பெயரில் தரக்குறைவாக நடத்துவதும், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதும், சட்டத்தின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைப்பதாக அமைந்துள்ளன.

நாகர்கோவிலைச் சார்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சிறையில் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக அவரின் உறவினர்கள் கூறிய செய்தி ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, சென்னை புழல் சிறையில் இருந்த மற்றொரு கைதி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக பரவிவரும் தகவல் காவலர்கள் மற்றும் காவல்துறை மீது பொதுமக்களுக்கு ஒருவித அச்சத்தையே ஏற்படுத்துகின்றது. எனவே, திருத்துறைப்பூண்டி விவசாயி தற்கொலை வழக்கில் விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, காவல்துறையினரின் செயல்பாடுகளில் மனிதநேயம், பொறுப்புணர்வு மற்றும் சட்டப்பூர்வமான கடமை ஆகியவை முதன்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தவெக அரசையும், காவல்துறை தலைவரையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source: Read Full Article