புதுச்சேரியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க 'பிரஸ் கிளப்' கட்டிடத்தை, சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) அலுவலகமாக மாற்ற முயற்சி நடப்பதாகக் கூறி, இந்திய பத்திரிகை கவுன்சிலிடம் புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் சங்கம் அதிரடியாக புகார் மனு அளித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் ஆர்.கே. ராஜா, இந்திய பத்திரிகை கவுன்சில் தலைவர் நீதியரசர் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் அவர்களுக்கு அனுப்பியுள்ள பரபரப்பு மனுவில் கூறியிருப்பதாவது:-

15 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் கட்டிடம்!

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் வீதியில் நகராட்சிக்குச் சொந்தமான கட்டிடத்தில் 'புதுச்சேரி பிரஸ் கிளப்' கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. இதன் வாடகையை புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறை செலுத்தி வருகிறது.

ஆனால், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரஸ் கிளப்பிற்குத் தேர்தல் நடத்தப்படாததால், கட்டிடம் பூட்டப்பட்டு பத்திரிகையாளர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தி பிரஸ் கிளப்பை மீண்டும் திறக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

முதல்வருக்கே தெரியாமல் ?

இந்த நிலையில், புதுச்சேரி முதலமைச்சரிடமோ அல்லது செய்தித் துறையிடமோ எந்தவித ஆலோசனையும் செய்யாமல், புதுச்சேரி நகராட்சி ஆணையர் ஸ்ரீஜித், ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணனுடன் சேர்ந்து பிரஸ் கிளப் கட்டிடத்திற்குள் நுழைந்து ஆய்வு செய்துள்ளார்.

அந்த கட்டிடத்தை எம்.எல்.ஏ. அலுவலகமாக மாற்ற நகராட்சி ஆணையர் தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்து வருகிறார். பத்திரிகையாளர்களைக் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்படும் இந்த நடவடிக்கை, பத்திரிகையாளர்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும், செய்தி சேகரிக்கும் பணியைப் பாதிப்பதாகவும் உள்ளது

பத்திரிகையாளர்கள் சங்கத்தின் முக்கியக் கோரிக்கைகள்

இந்திய பத்திரிகை கவுன்சில் தலையீடு:

பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்த விவகாரத்தில் இந்திய பத்திரிகை கவுன்சில் உடனடியாகத் தலையிட வேண்டும்.

தேர்தல் நடத்த உத்தரவு:

எவ்வித தாமதமுமின்றி ஜனநாயக முறையில் பிரஸ் கிளப்பிற்குத் தேர்தலை நடத்தச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

கட்டிடத்தை மாற்றத் தடை:

சட்டப்பூர்வத் தீர்வு காண்பதற்கு முன்பாக பிரஸ் கிளப் கட்டிடத்தின் பயன்பாட்டை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதைத் தடுக்க நகராட்சி ஆணையருக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

பத்திரிகையாளர் நலன்: பிரஸ் கிளப் வளாகத்தை முழுக்க முழுக்க பத்திரிகையாளர் சமூகத்தின் பயன்பாட்டிற்கு மட்டுமே பேண அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இக்கோரிக்கை மனுவின் நகல்கள் புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் அலுவலகம், தலைமைச் செயலாளர், செய்தித் துறைச் செயலாளர், நகராட்சி ஆணையர், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காவல் துறை தலைமையகம் ஆகியவற்றுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Source: Read Full Article