என்னை ஜெயிலுக்கு அனுப்புவியோ.. உன் ஆட்சி என்னாகும் தெரியுமா? - விஜய்க்கு அனிதா ராதாகிருஷ்ணன் சவால்

என்னை ஜெயிலுக்கு அனுப்புவியோ.. உன் ஆட்சி என்னாகும் தெரியுமா? - விஜய்க்கு அனிதா ராதாகிருஷ்ணன் சவால்
News Image

முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை ஒருமையில் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் சாத்தான்குளத்தில் மாபெரும்   கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், “இன்றைக்கு நம்மை வீழ்த்த பல வியூகங்கள் வகுக்கப்பட்டு தோற்கடித்தார்கள். நம் தலைவர் மு.க.ஸ்டாலினை வீழ்த்தினார்கள். தலைவரை எதிர்த்து ஜெயித்தவர் சொல்கிறான், நான் 5 நிமிஷம் பேசுனேன். கொளத்தூரில் கொத்து பரோட்டா ஆக்கி விட்டார்கள். இதை யார் சொல்கிறார் என்று பார்த்தால் மாலை 6 மணிக்கு வீட்டுக்குள் போய் அடுத்த நாள் காலை 10 மணிக்கு எழுந்திருப்பவன் தான். அவனுக்கு வெளியில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. தமிழ்நாட்டில் யார் இருக்கிறார், யார் போனார், யாருக்கு செய்தோம் என்பதெல்லாம் தெரியாது.

கரூரில் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது அங்கிருந்த பேப்பரை எடுத்து வாசிக்கிறார். விஜய் சினிமாவில் நடிப்பது போல செயல்பட்டு கொண்டிருக்கிறார். இந்த வேடம் எல்லாம் எடுபடாது. வரலாறை உருவாக்கும் காலமாக உள்ளாட்சி மன்ற தேர்தல் வருகிறது. அப்போது எல்லா இடத்திலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்ற வரலாற்றை நாம் உருவாக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி எங்கேயாவது ஜெயித்து விடட்டும் பார்க்கலாம். தவெக ஜெயிக்கப்பட்டும் பார்க்கலாம். யாரும் ஜெயிக்க முடியாது. இடைத்தேர்தல் எப்போது வைத்தாலும் திமுக தலைவர் ஸ்டாலின் யாரை ஆதரிக்கிறாரோ அவர் தான் வெற்றி பெற போகிறார் என்ற வரலாறு உருவாகப் போகிறது.

மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம். சினிமா மோகத்தை காட்டி வீழ்த்தலாம் என்ற நிலையில் தான் முதலமைச்சர் விஜய் உள்ளார். நான் பேச ஆரம்பித்தால் இன்னொருத்தர் உள்ளே வருவாரு. அது முதல் போட்ட முதலமைச்சரான ஆதவ் அர்ஜூனா. அவர் தான் விஜய் எப்படி நடக்க வேண்டும் என சொல்கிறார். திமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என்பதை உள்ளாட்சி தேர்தலில் நிரூபிக்க வேண்டும்.

Also Read: TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளந்தலைவர் உதயநிதிக்கு ஈடாக இன்னொரு தலைவரை நம்மால் சொல்ல முடியுமா?.. கனிமொழி போல யாரும் பாராளுமன்றத்தில் பணியாற்றி இருக்கிறார்களா?.. நான் மேடையில் பேசியதற்கு கைது செய்தார்கள். முன் ஜாமின் கேட்டு உடனே கிடைத்தது. ஆதவ் அர்ஜூனா இங்குள்ள போலீஸுக்கு போன் போட்டு ஒரு மாதம் உள்ளே வையுங்கள் என சொன்னார். 5 வருடம் உள்ளே இருந்தாலும் எந்த கொம்பனாலும் திமுகவை அசைக்க முடியாது. என்னை ஜெயிலில் வச்சுருவியா.. உங்க ஆட்சி எத்தனை நாட்கள் இருக்கும்?.. ஒவ்வொரு நாளும் எண்ணப்படுகிறது. இன்றைக்கு திமுக கம்பீரமாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks