விழுப்புரம் : நீட்தேர்வி குளருபடியில் மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்துள்ளது வரவேற்கதக்கது என்றும் நீட் தேர்வினை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் கனிமவளக்கொள்ளை குறித்து சிபி ஐ விசாரணை செய்ய வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் 88 வது பிறந்த நாள் விழாவில் கோனேரிக்குப்பத்திலுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தனி நபர் இயக்கத்தினை தொடங்கி ஆறு இட ஒதுக்கீடுகளை மருத்துவர் ராமதாஸ் பெற்று கொடுத்துள்ளதாகவும்,பூரன மதுவிலக்கிற்கு முழு காரணமாக ராமதாஸ் உள்ளதாகவும், சுற்று சூழல் பாதிப்பு சுற்று சூழல் தாக்கம் குறித்து என்னவென்று தெரியாமல் பல கட்சிகள் உள்ளதாகவும், உழவர் கட்சியாகவும் நீர் மேலாண்மையை கையாளகூடியதும் அதனை வலியுறுத்தும் கட்சியாக இருந்து வருவதாக தெரிவித்தார்.

மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்துள்ளது வரவேற்கதக்கது என்றும் நீட் தேர்வினை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், கல்வி அமைச்சர் பதவி விலகியது ஒரு பதவி ஆனால் முழுமையாக நீட்டினை ரத்து செய்ய வேண்டும் இந்தியாவிற்கு தேவையில்லாத ஒரு தேர்வு நீட் கிராம புற மாணவர்கள் நீட் தேர்வினால் மருத்துவம் பயில முடியவில்லைஒரு தேர்வு தற்கொலைக்கு தூண்டுவதென்றால் அந்த தேர்வே தேவையில்லை நீட் தேர்வில் வினாத்தாள் வெளியாகி உள்ளதால் தரமில்லாத மாணவர்கள் மருத்துவத்திற்கு வருகிறார்கள்டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது எந்த ஒரு வழக்கும் போட கூடாது மாணவர்கள் போராட்டத்தில் மாணவர்கள் போல வந்து பெண்களை இழிவு படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழ்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் தான் பாடப்படும் என மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகம் மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது கண்டனத்துக்குரியது. இதில் ஆளுநர் அழுத்தம் கொடுக்ககூடாது அரசியல் செய்ய கூடாது மரபுகளை கடைபிடிக்க வேண்டும், மற்றவர்களை கட்டாயபடுத்த கூடாது தமிழ் தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என கூறினார். மேகதாது விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகவிற்கு செல்ல கூடாது பேச்சுவார்த்தைக்கு செல்ல கூடாது அனைத்து கட்சி கூட்டத்தினை கூட்டி பிரதமரை சந்திக்க வேண்டும், கர்நாடகா அடாவடியாக முதலமைச்சர் பேசி வருகிற நிலையில் மேகதாது குறித்து எந்த வகையிலும் முதல்வர் பேசக்கூடாது என தெரிவித்தார்.

நல்ல எதிர்கட்சியாக பாமக செயல்படுவதாகவும், தமிழக அமைச்சரவையில் நாங்கள் இடம் பெற மாட்டோம் நிர்வாகி ஒருவர் அப்படி கூறியிருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுப்பேன், பாமக நல்ல திட்டங்களை சொன்னால் தமிழக அரசு ஏற்று கொள்கிறார்கள் என கூறினார். தென்மாவட்டங்களில் லாக்கப் மரணம் என்பது நிகழ்கிறது அப்படி நிகழாமல் காவல் துறை செயல்பட வேண்டும். திமுக செய்ததை தான் தவெக அரசு செய்தது ஏர்போட் மூர்த்தி மீது ஏன் குண்டர் சட்டம் போட வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

கனிம வளக்கொள்ளை என்பது தமிழ்நாட்டில் நிகழ்கிறது மேற்கு தொடர்ச்சி மலை பாதியை காணோம் கனிமவளக்கொள்ளை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கனிமவளக்கொள்ளை குறித்து சிபிஐ விசாரனை செய்ய வேண்டும், குவாரிகளை முறைபடுத்தினால் தமிழக அரசுக்கு 25 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என தெரிவித்தார். பாமகவில் எந்த குழப்பமும் இல்லை வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதாகவும் பாமகவால் கூட்டணி கட்சிக்கு மிகபெரிய பலம் உள்ளதாக கூறினார்.

Source: Read Full Article