சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய நீர் ஆதார பிரச்சனை சம்பந்தமாக தலைமைச் செயலகம் சென்று அமைச்சரை சந்தித்தால், கூட்டணி பேசிவிட்டார்கள் என்றும் அமைச்சரவையில் இடம்பெறப் போகிறார்கள் என்று விமர்சனம் செய்கிறார்கள். நான் தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனையான நீர் ஆதார பிரச்சனை சம்பந்தமாக தான் அமைச்சர்களை சந்தித்தேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் 38 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்ட நிகழ்ச்சி சென்னை தங்க சாலையில் உள்ள மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ஏராளமான தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அன்புமணியின் மேடைப்பேச்சு விவரம்:

38 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மெரினா கடற்கரையில் 10 லட்சம் மக்களை கூட்டி பாட்டாளி மக்கள் கட்சியை மருத்துவர் ராமதாஸ் தொடங்கினார். 38 ஆண்டுகளாக பாமக தமிழ்நாட்டில் முக்கிய கட்சியாக உள்ளது. பாமக கடந்து வந்த பாதை கடினமான பாதை ஆனால் 38 ஆண்டுகளுக்குப் பிறகு சரியான பாதையில் வந்திருக்கிறோமா என்று நினைத்து பார்த்தால் நிச்சயமாக அது சரி. நம்முடைய மருத்துவர் அய்யா அவர்கள் 46 ஆண்டுகள் பொது வாழ்க்கையில ஈடுபட்டு எத்தனையோ மாற்றங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து வாழ வேண்டும் கட்சியை தொடங்கிய நாமும் தமிழ்நாட்டை ஆள வேண்டும் ஆண்டாள் தான் தமிழ்நாட்டிற்கு நன்மை வரும் என்னும் நோக்கத்தில் 38 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை தொடங்கினார்.
*தமிழ்நாட்டின் வரலாற்றை எழுதினால் அதில் பாமக விரும்பியதற்கு பங்கு இருக்கிறது இன்றைக்கு தமிழ்நாட்டின் வரலாற்றை பாமக வை தனித்து எழுத முடியாது*
இவ்வளவு சோதனை வந்தாலும் நாம் இவ்வளவு ஆண்டு காலமாக சிறந்த முறையில் மக்களுக்காக சேவை செய்து கொண்டிருக்கிறோம் அந்த உணர்வோடு இருக்கிறோம். நமது எத்தனையோ விமர்சனங்களை அங்க இருக்கிறோம் பாமக ஜாதி கட்சி அவர்களின் இங்கு செல்வார்களா அங்கு செல்வார்கள் நம்முடைய நோக்கம் தமிழ்நாட்டு மக்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் சமூக நீதி வரவேண்டும்.

*பாமக தலைவராக செயல்படுவதில் எனக்கு பெருமை அது அத்தனையும் தொண்டர்களை தான் சேரும்*

தமிழ்நாட்டை அறுபதாண்டுகள் ஆட்சி செய்த கட்சிகள். தமிழ்நாட்டில் முக்கிய தலைவர் எனக்கு அலைபேசி மூலமாக பேசினார் நான் ஒரு அறிக்கை வெளியிட்டேன். நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று நான் அறிக்கையை வெளியிட்டேன் . கடந்த திமுக ஆட்சியில் ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் என்று திமுக அரசு வெளியிட்டது தமிழக வெற்றிக் கழக அரசு அதையே தொடர்ந்தது அதை கேட்க தவெக அரசு திருத்த வேண்டும் என அறிக்கை வெளியிட்டேன்.

உண்மையாக தமிழ்நாட்டிற்கு விடுதலை கிடைத்த நாள் மே மாதம் நான்காம் தேதி என ஒரு முக்கிய தலைவர் என்னிடம் பேசினார். பத்தாண்டுகளுக்கு முன்பு இது போன்ற ஒரு முயற்சியை நாங்கள் எடுத்தோம் நமக்கு என்ன பிரச்சனை என்றால் நாம் எதையும் முன்கூட்யே செய்து விடுவோம் , 2016 ஆம் ஆண்டு கருணாநிதி ஜெயலலிதா இருந்ததால் அப்போது நம்முடைய பிரச்சாரம் வெற்றி பெற்றது நாம் வெற்றி பெற முடியவில்லை நம்முடைய அறிக்கையை பார்த்து பல தலைவர்கள் காப்பி அடிக்கிறார்கள்.

திமுக கடந்த ஆட்சியில் பென் நிறுவனத்தை வைத்துக்கொண்டு ஊடகங்களை அச்சுறுத்தியது

கடந்த ஆட்சியில் யாருக்கும் ஜனநாயகம் இல்லாத சூழல், ஊடகம் ஜனநாயகத்தின் நான்காவது தூண், ஆனால் கடந்த ஆட்சியில் அப்படி இல்லை, ஜாதிவாதி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினோம் அதில் ஆளும் கட்சி தவெக அதிமுக கலந்து கொண்டு ஒரு மனதாக சமூக நீதிக் கணக்கு எடுப்பு நடத்த வேண்டும் தீர்மானத்தை நிறைவேற்றினோம். அந்த கூட்டத்துக்கு எங்களால் வர முடியவில்லை உங்களுடைய தீர்மானத்திற்கு ஆதரவை தெரிவிக்கிறோம் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் என்னிடம் தொலைபேசியில் பேசினார்.

நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தை அவர் அலுவலகத்தில் அவருடைய அதிகாரிகளை சந்தித்து தமிழ்நாட்டின் நீர் மேலாண்மை குறித்து பேச வேண்டும் என்று கூறினேன் அதற்காகத்தான் அவரை அலுவலகத்தில் சென்று சந்தித்தேன். அதற்கு ஒரு சிலர் கூட்டணி பேசி விட்டார்கள், அமைச்சரவை பற்றி பேசிவிட்டார்கள் என்று கூறுகிறார்கள் .

தமிழ்நாட்டில் குடிப்பதற்கு தண்ணீர் கிடையாது விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை கேரளா ,ஆந்திரா மற்றும் கர்நாடகாவிடம் தண்ணீருக்கு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம்

காவேரி குண்டாறு திட்டம், தர்மபுரி ஒகேனக்கல் திட்டம், மேட்டூர் திட்டம் என இவைகள் குறித்து நீர்வ ளத்துறை அமைச்சர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் பேசினோம் அமைச்சர் புதிதாக வந்திருக்கிறார் அவருக்கு தெரியவில்லை அதிகாரிகளுக்கும் ஒன்றும் சொல்வதிற்கில்லை, சென்னையை ன சின்னா பின்னம் ஆகிவிட்டார்கள் அதற்கு காரணம் யார் சேகர் பாபு. சென்னை மாநகராட்சி மேயருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது தெரியுமா ? சென்னை மாநகராட்சி மேயருக்கு அதிகாரம் இருக்கிறது அவரை செயல்பட விடவில்லை காரில் தொங்கிக் கொண்டு சென்றதை எல்லாம் பார்த்தோம் இதற்கு திமுக தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் தான் சென்னை கிளோஸ்

தமிழ்நாட்டில் இளைஞர்கள் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் அதை நாம் மதிக்க வேண்டும். தற்பொழுது ஆட்சியில் கொண்டு வந்த இளைஞர்கள் இந்த ஆட்சி சரி இல்லை என்றால் முதலில் தெருவில் இறங்கி நிற்பது அதே இளைஞர்கள் தான். இந்த மாற்றத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டிற்கு என்ன நன்மை செய்ய முடியும் என்பது தான் எங்கள் நோக்கம்..
இதற்கு முன்பு நிறைய சொல்லி இருக்கிறோம் யாரும் செய்யவில்லை இப்பொழுது முதலமைச்சர் புதியது தான் அவருக்கும் தெரியவில்லை ஆனால் தெரிந்து கொள்ள இருக்கிறார்..
மேகதாது அணை என்பது திடீரென்று வந்த பிரச்சனை கிடையாது காவேரி ஆற்றை தடுத்து மிகப்பெரிய அணையை கட்ட வேண்டும் என கர்நாடகாவின் அத்தனை கட்சிகளும் முயற்சி செய்து வருகிறார்கள்.

மேகதாது அணையை கட்ட வேண்டும் என்று கர்நாடகாவின் அனைத்து கட்சிகளையும் அழைத்துச் சென்று டெல்லியில் பிரதமரை சந்திக்கிறார்கள். மேகதாது அணை தொடர்பாக நாம் நடைபயணம் சென்ற பொழுது தமிழ்நாட்டில் உள்ள மற்ற கட்சிகள் குதிரை பேரம் ஒட்டக பேரம் செய்து கொண்டிருந்தார்கள். பெங்களூருவிற்கு குடிநீர் தேவை 5 டிஎம்சி தான் ஆனால் அவர்கள் கட்டக்கூடிய அணை 70 டி எம் சி அவர்கள் அணை கட்டி விட்டால் தமிழ்நாடு அவ்வளவுதான்.

எங்கள் எல்லாம் நீர்வளத்துறை அமைச்சர் டெல்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் பிரதமரை சந்திக்க வைக்க வேண்டும் மேகதாது அணை கட்டினால் 12 ஆயிரம் ஏக்கர் காடுகள் பாதிக்கப்படும்.. இதைப் பற்றி மக்கள் பேச வேண்டும் இளைஞர்கள் பேச வேண்டும்.

சட்டமன்றத்தில் நமது பாமக சட்டமன்ற குழு தலைவர் சௌமியா சட்டமன்றத்தில் சிறப்பாக பேசினார், தமிழ்நாடு பெண்களுக்காக சௌமியா அன்புமணி சட்டமன்றத்தில் பேசுகிறார் என தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய பயணம் தமிழ்நாட்டின் முன்னேற்றம்தான் எங்களுடைய லட்சியம் எங்களுக்கு சுயநலம் கிடையாது சுயநலமாக இருந்தால் நாங்கள் வேறு அரசியல் செய்திருப்போம் என்று நோக்கம்.

திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று முதல் முதலில் குரல் கொடுத்தவன் நான்.. நம் கூட்டணி ஆட்சி வர முடியவில்லை என்றால் திமுக ஆட்சியை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டோம் ரோடு போடாமல் பில் எடுக்கிறார்கள். திருவான்மியூர் உத்தண்டி மேம்பாலம் மிகப்பெரிய ஊழல் அவசர அவசரமாக அடிக்கல் நாட்டினார் அப்போதைய முதலமைச்சர். இந்தத் திட்டத்தை ரத்து செய்து விட்டோம் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.

தமிழ்நாடு விவசாயிகள் கூட்டுறவு கடன்களை தமிழ்நாட்டில் தண்ணீர் கிடையாது குருவை சாகுபடி முடிந்துவிட்டது கூட்டுறவில் கடன் வாங்கிவிட்டு விவசாயிகளை தினமும் மிரட்டுகிறார்கள், முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை விவசாயிகளையும் கூட்டுறவு வங்கி கடன்களை தள்ளுபடி செய்யுங்கள் இது அவசியமானது, இதை உங்களுடைய தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறீர்கள். மகாராஷ்டிராவில் 55 லட்சம் விவசாயி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

Source: Read Full Article