உத்தரப் பிரதேச மாநிலத்தில் தன் கணவரை தூக்க மாத்திரை கொடுத்து குளியலறையில் கொன்று புதைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் ஆக்ராவில் நடைபெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட தகவலின்படி, “சுரேந்திர ஷர்மா என்பவர் தனது மனைவி ரூபி ஷர்மாவுடன் வசித்து வந்தார். இதனிடையே கடந்த ஒன்றரை மாதங்களாக சுதேந்திர ஷர்மா காணாமல் போயிருந்தார். அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தினர் அவர் காணாமல் போனதாக போலீசில் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க தொடங்கினர்.

அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்திய நிலையில் ஆரம்பத்தில் சுதேந்திர ஷர்மா காணாமல் போனபோது அவர்கள் ரூபியிடம் கணவர் எங்கே என கேட்டுள்ளனர். அதற்கு அவர் எவ்வித சஞ்சலமும் இன்றி சுதேந்திர ஷர்மா வெளியூர் சென்றிருப்பதாகவும், விரைவில் வந்து விடுவார் எனவும் தெரிவித்திருக்கிறார். இதனால் பெரிதும் கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளனர் என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் ரூபி ஷர்மாவும், மைத்துனர் அனிலும் சுதேந்திரா காணாமல் போனதாக மே 18ம் தேதி தான் புகார் அளித்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதனால் போலீசாரின் சந்தேகப் பார்வை முதலில் அனில் மீது திரும்பியது. அதேசமயம் ரூபி தன் கணவரைத் தேடும் பணியில் காவல்துறையுடன் இணைந்து தேடுவது போல நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தன் கணவர் காணாமல் போனதிலிருந்து தான் மனமுடைந்து போனதைக் காட்டுவதற்காக ரூபி அக்கம்பக்கத்தினர் முன்னிலையில் அழுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

எனினும் சுரேந்திராவின் குடும்பத்தினர் கொடுத்த தகவல், ரூபி சொன்ன தகவலில் இருந்து வேறுபட்டு இருந்தது காவல்துறைக்கு ரூபி ஏதோ மறைப்பதாக தோன்ற வைத்தது. அவரை தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து தங்கள் பாணியில் கேட்க சுரேந்திரா ஷர்மாவை கொலை செய்ததை ரூபி ஒப்புக்கொண்டார். இதனைக் கேட்டு காவல்துறையினருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. தொடர்ந்து கொலைக்கான காரணம் பற்றி கேட்டபோது, “சுரேந்திரா பரத்பூரில் குடிபோதையில் தன்னுடைய உறவினர்களுடன் சண்டையிட்டதால் சட்ட நடவடிக்கை மற்றும் நீதிமன்ற அலைச்சல்களுக்கு அஞ்சி அவரை கொன்றதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது கணவரின் உணவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்ததாகவும் அவரது உடலை குளியலறை அடியில் புதைத்ததாகவும் ரூபி தெரிவித்துள்ளார். சுரேந்திரா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது இந்த கொலை நடந்துள்ளது. மேலும் அவரது உடலை மண் தரை கொண்ட குளியலறைக்குள் இழுத்துச் சென்று மறைத்து வைத்தாள்.

இதையும் படிங்க: மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்

மறுநாள் கூலித் தொழிலாளர்களை அழைத்து குளியலறை முழுவதையும் மண்ணால் நிரம்பியுள்ளார். பின்னர் அந்த மண் மீது கான்க்ரீட் தளம் போட கொத்தனாரை வரவழைத்தார். கொலை நடந்த ஓரிரு நாட்களுக்குள் தொழிலாளர்கள் வந்ததால் யாருக்கும் உடலில் இருந்து எழுந்த துர்நாற்றம் வராமல் இருந்துள்ளது. இதனையடுத்து குளியலறை தரையைத் தோண்டி சுதேந்திரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விவகாரத்தில் ரூபிக்கு யாரேனும் உதவினார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

Source: Read Full Article