“அறிமுகப்படுத்தியதே நீங்கதானே?” நீட் விவகாரத்தில் நாடகம் ஆடும் காங்கிரஸை தோலுரித்த டிடிவி தினகரன்

“அறிமுகப்படுத்தியதே நீங்கதானே?” நீட் விவகாரத்தில் நாடகம் ஆடும் காங்கிரஸை தோலுரித்த டிடிவி தினகரன்
News Image

நீட் தேர்வு என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்திய காங்கிரஸ் இன்று அதை எதிர்த்து போராடுவது அரசியல் கேலிக்கூத்து என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் நீட் தேர்வில் நடந்த முறைகேடுக்கு எதிராக இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் சார்ப்பில் ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் விஜய் அறிக்கையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், காங்கிரஸின் இந்தப் போராட்டத்தை விமர்சித்துள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். மேலும், ராகுலின் கைது கண்டனம் தெரிவித்த முதல்வரையும் கேள்வி கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2010 ஆம் ஆண்டு, மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு என்ற கருத்தை உருவாக்கி, நீட் தேர்விற்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த காங்கிரஸ் கட்சி, இன்று அதே நீட் தேர்வுக்கு எதிராக தெருக்களில் இறங்கிப் போராடுவது மாணவ, மாணவியர்களின் உணர்வுகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் கீழ்த்தரமான செயலாகவே பார்க்கவேண்டியுள்ளது. நீட் தேர்வை எதிர்த்து தற்போது போலிப் போராட்டம் நடத்தும் காங்கிரஸ், 2010 ஆம் ஆண்டு தான் ஆட்சியில் இருந்த போது நீட் தேர்வு அறிமுகப்படுத்த முயன்றது தவறு என்பதை தற்போதாவது ஒப்புக் கொள்கிறதா ? அல்லது அப்போது எடுத்த முடிவு சரி என்றால் தற்போதைய போராட்டங்கள் அரசியல் காரணங்களுக்காகவா ? என்பதை நாட்டு மக்களுக்கு முதலில் விளக்க வேண்டும்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சாலைகளில் இறங்கி போராடிய மாணவர்கள் மீது காவல்துறையை ஏவி, வலுக்கட்டாயமாக கைது செய்து விட்டு, பொதுமக்களுக்கு எத்தகைய சிரமத்தையும் ஏற்படுத்தாமல், முறையாக முன் அனுமதி பெற்று அதற்குரிய இடத்தில் அமைதியாக போராடலாம் என அதிகாரத் தொணியில் பதிலளிக்கும் தவெக அரசு, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி இல்லம் முன்பாக எவ்வித அனுமதியும் பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் போராட்டம் நடத்திய ராகுல்காந்தியை கைது செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை என கூறுவது முன்பின் முரணாக தெரியவில்லையா ?

தனது கடந்தகால தவறுகளையும், முடிவுகளையும் மூடி மறைத்து, மாணவ, மாணவியர்களின் எதிர்கால நலன் எனும் முகமுடியை அணிந்து கொண்டு காங்கிரஸ் கட்சியினர் முன்னெடுக்கும் இப்போராட்டம், மாணவ, மாணவியர்களை தூண்டிவிட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே தவிர, மாணவ, மாணவியர்களின் நலனை காக்கும் போராட்டம் அல்ல என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர் என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks